/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெண் எஸ்.பி.,யை நாயுடன் ஒப்பீட்டு பேசிய எம்.எல்.ஏ., மீது வழக்கு பெண் எஸ்.பி.,யை நாயுடன் ஒப்பீட்டு பேசிய எம்.எல்.ஏ., மீது வழக்கு
பெண் எஸ்.பி.,யை நாயுடன் ஒப்பீட்டு பேசிய எம்.எல்.ஏ., மீது வழக்கு
பெண் எஸ்.பி.,யை நாயுடன் ஒப்பீட்டு பேசிய எம்.எல்.ஏ., மீது வழக்கு
பெண் எஸ்.பி.,யை நாயுடன் ஒப்பீட்டு பேசிய எம்.எல்.ஏ., மீது வழக்கு
ADDED : செப் 04, 2025 03:34 AM

தாவணகெரே: தாவணகெரே பெண் எஸ்.பி., உமா பிரசாந்த்தை நாயுடன் ஒப்பிட்டு பேசிய, ஹரிஹரா பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தாவணகெரே ஹரிஹரா தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., ஹரிஷ். இவர், நேற்று முன்தினம் தாவணகெரேயில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது:
எதி ர்க்கட்சி எம்.எல்.ஏ.,வான என்னை, தாவணகெரே எஸ்.பி., உமா பிரசாந்த் மதிப்பது இல்லை; அரசு நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்ளும்போது, முகத்தை திருப்பி வைத்துக் கொள்கிறார்.
ஆனால் , காங்கிரஸ் எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பா, அவரது மகனும், தோட்டக்கலை அமைச்சருமான மல்லிகார்ஜுன், இவரது மனைவியும், தாவணகெரே எம்.பி.,யுமான பிரபா மல்லிகார்ஜுன் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில், அவர்களை வரவேற்க, வாசல் முன் நாய் போன்று எஸ்.பி., காத்து நிற்கிறார். நானும் மக்கள் பிரதிநிதி தான். ஏன் இந்த பாகுபா டு? அதிகாரம் எப்போது நிரந்தரமானது இல்லை.
இவ்வாறு அவர் விமர்சனம் செய்தார்.
தன்னை நாயுடன் ஒப்பிட்டு பேசிய ஹரிஷ் மீது, தாவணகெரே கே.டி.ஜே. நகர் போலீஸ் நிலையத்தில், எஸ்.பி., உமா பிரசாந்த் நேரில் சென்று புகார் அளித்தார்.
அந்த புகாரின்படி ஹரிஷ் மீது, மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவாகி உள்ளது.