/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ விஷ்ணுவர்த்தனுக்கு 'கர்நாடக ரத்னா' விருது அமைச்சரவையில் முடிவெடுக்க முதல்வர் உறுதி விஷ்ணுவர்த்தனுக்கு 'கர்நாடக ரத்னா' விருது அமைச்சரவையில் முடிவெடுக்க முதல்வர் உறுதி
விஷ்ணுவர்த்தனுக்கு 'கர்நாடக ரத்னா' விருது அமைச்சரவையில் முடிவெடுக்க முதல்வர் உறுதி
விஷ்ணுவர்த்தனுக்கு 'கர்நாடக ரத்னா' விருது அமைச்சரவையில் முடிவெடுக்க முதல்வர் உறுதி
விஷ்ணுவர்த்தனுக்கு 'கர்நாடக ரத்னா' விருது அமைச்சரவையில் முடிவெடுக்க முதல்வர் உறுதி
ADDED : செப் 04, 2025 03:34 AM

பெங்களூரு: மறைந்த நடிகர் விஷ்ணு வர்த்தனுக்கு நினைவு மண்டபம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கக் கோரி, முதல்வர் சித்தராமையாவிடம், விஷ்ணுவர்த்தன் மனைவி பாரதி கோரிக்கை விடுத்தார்.
மறைந் த நடிகர் விஷ்ணுவர்த்தனின் சமாதி, பெங்களூரு அபிமான் ஸ்டூடியோவில் இருந்தது. கடந்த மாதம் நிலப்பிரச்னை தொடர்பாக, இச்சமாதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. இது அவரது ரசிகர்கள் மட்டுமின்றி, அவரின் மனைவி பாரதிக்கு பெரும் மனவேதனையை ஏற்படுத்தியது.
விஷ்ணுவர்த்தனுக்கு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதுபோன்று நடிகையர் ஜெயமாலா, ஸ்ருதி, மாளவிகா அவினாஷ் ஆகியோர் முதல்வர் சித்தராமையாவை சந்தித்து, 'விஷ்ணுவர்த்தனுக்கு கர்நாடக ரத்னா விருது வழங்குவது; மல்லேஸ்வரம் சாலைக்கு மறைந்த நடிகை சரோஜா தேவி பெயர் சூட்ட வேண்டும்' என, கேட்டுக் கொண்டனர்.
இந்நிலையில், முதல்வரின் அலுவலக இல்லமான கிருஷ்ணாவில், முதல்வர் சித்தராமையாவை, விஷ்ணுவர்த்தன் மனைவியும், நடிகையுமான பாரதி, அவரது மருமகனும் நடிகருமான அனிருத் நேற்று சந்தித்தனர்.
பின், நிருபர்களிடம் பாரதி அளித்த பேட்டி:
விஷ்ணுவர்த்தன் ரசிகர்களுக்காக அபிமான் ஸ்டூடியோவில் நினைவு மண்டபம் கட்ட நிலம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். முதல்வரும் இதற்கு நல்ல பதில் சொல்லி உள்ளார்.
மேலும், விஷ்ணுவர்த்தனுக்கு 'கர்நாடக ரத்னா' விருது வேண்டும் என்று நான் கேட்கவில்லை. அவரது ரசிகர்கள் கேட்கின்றனர். எனவே, அவருக்கு கர்நாடகா ரத்னா விருது வழங்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
நடிகர் அனிருத் அளித்த பேட்டி:
விஷ்ணுவர்த்தன் நினைவு மண்டபம் கட்ட, அபிமான் ஸ்டூடியோவில் 10 சென்ட் நிலம் கேட்டுள்ளோம். முதல்வரும், வனத்துறை முதன்மை செயலர் அஞ்சும் பர்வேசிடம் மொபைல் போனில் பேசினார். அனுமதி கிடைக்கும் பட்சத்தில் செப்., 18ம் தேதி விஷ்ணுவர்த்தன் பிறந்த நாளில், அவரது நினைவு இடத்தில் கூடாரம் கட்டப்படும்.
அத்துடன் இன்று நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில், விஷ்ணுவர்த்தனுக்கு, 'கர்நாடக ரத்னா' விருது வழங்குவது குறித்து, கூட்டத்தில் விவாதித்து முடிவெடுக்கப்படும்' என்றார் முதல்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.