/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எம்.பி., சுதாமூர்த்தியிடம் சைபர் மோசடி முயற்சி எம்.பி., சுதாமூர்த்தியிடம் சைபர் மோசடி முயற்சி
எம்.பி., சுதாமூர்த்தியிடம் சைபர் மோசடி முயற்சி
எம்.பி., சுதாமூர்த்தியிடம் சைபர் மோசடி முயற்சி
எம்.பி., சுதாமூர்த்தியிடம் சைபர் மோசடி முயற்சி
ADDED : செப் 23, 2025 11:36 PM

பெங்களூரு : ராஜ்யசபா எம்.பி., சுதாமூர்த்தியிடம் சைபர் மோசடி செய்ய முயற்சித்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.
கர்நாடகாவில் அரசியல்வாதிகள், சினிமா நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் என பிரபலங்களை குறி வைத்து சமீபகாலமாக சைபர் திருடர்கள் மோசடி செய்து வருகின்றனர். இதில், கன்னட நடிகர் உபேந்திரா, முன்னாள் முதல்வர் சதானந்த கவுடா, பா.ஜ., - எம்.பி., சுதாகரின் மனைவி பிரீத்தி போன்றோர் சிக்கினர்.
இந்நிலையில், இன்போசிஸ் அறக்கட்டளையின் நிறுவனரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுதாமூர்த்தியிடம் சைபர் மோசடி செய்ய, சைபர் திருடர்கள் முயற்சி செய்து உள்ளனர். கடந்த 5ம் தேதி அடையாளம் தெரியாத நபரிடமிருந்து சுதா மூர்த்திக்கு அழைப்பு வந்து உள்ளது.
அந்நபர், தன்னை தொலைத்தொடர்பு துறையில் ஊழியராக பணியாற்றுவதாக அறிமுகப்படுத்தி கொண்டார். உங்கள் மொபைல் எண்ணை ஆதார் கார்டுடன் இணைக்கவில்லை. உங்கள் மொபைல் போனில் இருந்து ஆபாச வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளதாக கூறி, சுதா மூர்த்தியின் வங்கி தொடர்பான தகவல்களை கேட்டு உள்ளார்.
இதனால், சந்தேகமடைந்த சுதாமூர்த்தி, அந்நபரின் மொபைல் போன் எண்ணை, 'பிளாக்' செய்தார்.
இது குறித்து, அவர் சார்பாக கணபதி போப்பையா என்பவர், கடந்த 20ம் தேதி பெங்களூரு சைபர் கிரைம் போலீசில் புகார் செய்துள்ளார். சைபர் திருடர்கள் குறித்து போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.