Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சுத்தியலால் தாக்க முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு

சுத்தியலால் தாக்க முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு

சுத்தியலால் தாக்க முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு

சுத்தியலால் தாக்க முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு

ADDED : அக் 08, 2025 03:29 AM


Google News
ராஜாஜிநகர் : சாலையில் நடந்து சென்றவர்களை சுத்தியலால் தாக்க முயன்ற போதை ஆசாமியால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு, ராஜாஜிநகரில் உள்ள நவ்ரங் சதுக்கத்தில் நேற்று முன்தினம் இரவு அடையாளம் தெரியாத நபர், கையில் சுத்தியலை ஏந்தியவாறு சாலையில் ஓடினார். அவர், எதிரே வந்த உணவு டெலிவரி நபர் மீது சுத்தியலை வீசினார். உணவு டெலிவரி ஊழியர் அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

இதை பார்த்து அங்கிருந்தோர் பீதி அடைந்தனர். இருப்பினும், அந்நபர் மீண்டும் சுத்தியலை எடுத்துக் கொண்டு ஓடினார். பாதசாரிகள், பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த பலரும் பதற்றமடைந்தனர். இதை சிலர், தங்கள் மொபைல் போன்களில் பதிவு செய்தனர்.

இதுகுறித்து, போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுப்பிரமணியநகர் போலீசார், அந்நபரை பிடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:

கையில் சுத்தியலுடன் சாலைகளில் ஓடிய நபரின் பெயர் ஷாஹாபுதீன், 30. நவ்ரங் பகுதியை சேர்ந்தவர். மது போதையில் இருந்ததால் அவ்வாறு நடந்துள்ளார். இதுபோன்ற செயல்களில் வருங்காலத்தில் ஈடுபடக்கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது. அதன் பின் அவர் விடுவிக்கப்பட்டார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us