/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ முன்னாள் பிரதமர் தேவகவுடா 'அட்மிட்' முன்னாள் பிரதமர் தேவகவுடா 'அட்மிட்'
முன்னாள் பிரதமர் தேவகவுடா 'அட்மிட்'
முன்னாள் பிரதமர் தேவகவுடா 'அட்மிட்'
முன்னாள் பிரதமர் தேவகவுடா 'அட்மிட்'
ADDED : அக் 08, 2025 03:30 AM

பெங்களூரு : காய்ச்சல் காரணமாக முன்னாள் பிரதமர் தேவகவுடா, 92 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடா. தற்போது, ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார். பெங்களூரு பத்மநாபநகர் வீட்டில் வசிக்கிறார். நேற்று அதிகாலை 4:00 மணியளவில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
மணிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐ.சி.யு.,வில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
காய்ச்சல், சளியுடன் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் ஓரிரு நாட்களில் பொது வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.


