/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பனியால் உருவாக்கப்பட்ட தசரா அம்பாரி யானை பனியால் உருவாக்கப்பட்ட தசரா அம்பாரி யானை
பனியால் உருவாக்கப்பட்ட தசரா அம்பாரி யானை
பனியால் உருவாக்கப்பட்ட தசரா அம்பாரி யானை
பனியால் உருவாக்கப்பட்ட தசரா அம்பாரி யானை
ADDED : செப் 24, 2025 11:07 PM

மைசூரு: தசராவை முன்னிட்டு, மைசூரின் வட்டச்சாலை அருகில் உள்ள, 'ஸ்நோ பார்க்'கில், அம்பாரி சுமக்கும் யானை உருவச்சிலை, பனியால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மைசூரு நகரின் வட்ட சாலை அருகில் ஜி.ஆர்.எஸ்., 'ஸ்நோ பார்க்' உள்ளது.
தசராவை முன்னிட்டு இந்த பார்க்கில், பனியால் 15 அடி உயரமான அம்பாரி சுமந்த யானை உருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஸ்நோ யானை உருவத்தை, ரமேஷ் என்ற கலைஞரும், அதன் மீதுள்ள அம்பாரியை சிற்பக்கலைஞர் முரளியும் வடிவமைத்துள்ளனர்.
இதுகுறித்து, ஜிஆர்.எஸ்., 'ஸ்நோ பார்க்' இயக்குநர் அஸ்வின் தாங்கே கூறியதாவது:
தசராவை முன்னிட்டு, ஸ்நோ பார்க்கில் அம்பாரி சுமக்கும் யானையின் சிலை பனியால் உருவாக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 12 வரை இதை காண அனுமதி உள்ளது. இதை காண்பது புதிய அனுபவமாக இருக்கும்.
தசராவை காண மைசூருக்கு வரும் மக்களுக்கு, புதிய அனுபவம் கிடைக்க வேண்டும் என்பது, எங்களின் நோக்கமாகும்.
ஸ்நோ பார்க் வருவோர், ஆன்லைன், ஆப்லைனில் டிக்கெட் பெறலாம். சுற்றுலா பயணியர் அதிகமாக வருகை தந்து, ஸ்நோ பார்க்கை காண வேண்டும் என்பது, எங்களின் கோரிக்கையாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.