/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஒரே நேரத்தில் 25,000 பேர் பாடிய மாநிலத்தின் 'நாட கீதே' ஒரே நேரத்தில் 25,000 பேர் பாடிய மாநிலத்தின் 'நாட கீதே'
ஒரே நேரத்தில் 25,000 பேர் பாடிய மாநிலத்தின் 'நாட கீதே'
ஒரே நேரத்தில் 25,000 பேர் பாடிய மாநிலத்தின் 'நாட கீதே'
ஒரே நேரத்தில் 25,000 பேர் பாடிய மாநிலத்தின் 'நாட கீதே'
ADDED : செப் 24, 2025 11:08 PM

மைசூரு: தேசிய கவி குவெம்பு எழுதிய கன்னட நாடகீதே, மாநிலத்தின் மொழி பாடலாக பாடப்படுகிறது. அரசின் ஒவ்வொரு விழாவிலும் இப்பாடல் பாடப்படும். குவெம்புக்கு 20 வயது இருக்கும்போது, 'கிஷோர் சந்திராவாணி' என்ற புனைப்பெயரில் இப்பாடலை எழுதினார்.
இது, 1971ல் பெங்களூரு சாகித்ய பரிஷத்தால் அங்கீகரிக்கப்பட்டது. 2004ல், அவரின் நுாறாவது பிறந்த நாளை குறிக்கும் வகையில், மாநில கீதமாக, இந்த பாடல் அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
அவரை கவுரவிக்கும் வகையில் நடப்பாண்டு தசராவில் தசரா கவி துணை கமிட்டி, மைசூரு பல்கலைக்கழகம் இணைந்து, 'நாடகீதே 100 சாவிர ஸ்வரகல திருவிழா' ஏற்பாடு செய்திருந்தது.
இந்நிகழ்ச்சி, மைசூரு பல்கலைக்கழகத்தின் திறந்தவெளியில் உள்ள மானச கங்கோத்ரியில் நடந்தது. பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவ - மாணவியர், பேராசிரியர்கள், ஊழியர்கள் என, ஒரே நேரத்தில் 25,௦௦௦ பேர் கூடி, 'கன்னட நாட கீதே' பாடினர்.
விழாவில் மூத்த எழுத்தாளர் டாக்டர் அரவிந்த் மலகட்டி பேசியதாவது:
குவெம்பு, தனது நாடகத்தில் அமைதி, நல்லிணக்கம், உலகளாவிய சகோரத்துவம், சக வாழ்வுக்கான செய்தியை அனுப்பி உள்ளார். நாடகீதே பாடிய ஆயிரக்கணக்கானோரில், எனது குரலும் ஒன்று என்பதில் பெருமையாக உள்ளது.
கடந்த நுாற்றாண்டின் முதல் காலாண்டில், காந்தி தலைமையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டின்போது, கர்நாடகாவின் மகுடமான நாடகீதே, முதன் முதலில் தெரிய வந்தது. மாநில கீதம், ஒரு பெரிய பாரம்பரியத்தை கொண்டுள்ளது. அது, பாடப்படும்போதோ அல்லது கேட்கப்படும்போதோ பலரும் உணர்ச்சி வசப்படுவர்.
இவ்வாறு அவர் பேசினார்.