/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உயிருடன் உள்ள மகளை சாகடித்த ஊழியர்கள் ரேஷன் கார்டு குளறுபடியால் தந்தை வேதனை உயிருடன் உள்ள மகளை சாகடித்த ஊழியர்கள் ரேஷன் கார்டு குளறுபடியால் தந்தை வேதனை
உயிருடன் உள்ள மகளை சாகடித்த ஊழியர்கள் ரேஷன் கார்டு குளறுபடியால் தந்தை வேதனை
உயிருடன் உள்ள மகளை சாகடித்த ஊழியர்கள் ரேஷன் கார்டு குளறுபடியால் தந்தை வேதனை
உயிருடன் உள்ள மகளை சாகடித்த ஊழியர்கள் ரேஷன் கார்டு குளறுபடியால் தந்தை வேதனை
ADDED : அக் 21, 2025 04:13 AM

ஹாவேரி: உயிருடன் இருக்கும் மகளை, இறந்ததாக ரேஷன் கார்டில் குறிப்பிட்டு உணவுத்துறை ஊழியர்கள் குளறுபடி செய்துள்ளனர்.
ஹாவேரி நகரில் வசிப்பவர் மெஹபூபசாப் நதாப். இவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றுகிறார். இவரது மூத்த மகள் சுஹானாவுக்கு, 'அன்னபாக்யா' திட்டத்தின் உணவு தானியங்கள் கிடைக்கவில்லை.
இது குறித்து விசாரிக்க, தாலுகா அலுவலகம், கர்நாடகா ஒன் மையம் உட்பட பல்வேறு அலுவலகங்களுக்கு சென்றார். அப்போது தான் அவரது மகள், மூன்றரை ஆண்டுக்கு முன் இறந்துவிட்டதாக ரேஷன் கார்டில் பதிவாகியிருப்பது தெரிந்தது.
உயிருடன் உள்ள மகளை, இறந்ததாக குறிப்பிட்டதால் அதிர்ச்சி அடைந்த தந்தை, இதை சரி செய்யும்படி, அரசு அலுவலகங்களுக்கு அலைகிறார்.
உணவுத்துறை ஊழியர்களின் குளறுபடியால், மெஹபூபசாப் நதாபின் மகள் சுஹானாவுக்கு பள்ளியில் ஸ்காலர் ஷிப் உட்பட, அவருக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் கிடைக்கவில்லை.
இது குறித்து, மெஹபூபசாப் நதாப் கூறியதாவது:
ரேஷன் கார்டில் உள்ள குழப்பத்தை சரிசெய்ய, அலைகிறேன். நான் வாடகை ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்துபவன். ஒரு நாள் பணிக்கு செல்லாவிட்டாலும், வாழ்க்கை நடத்துவது கஷ்டம். நாங்கள் வாடகை வீட்டில் வசிக்கிறோம்.
ரேஷன்கார்டில், என் மகள் இறந்ததாக பதிவு செய்துள்ளனர். விரைவில் அவரது பெயரை, ரேஷன்கார்டில் சேர்க்க வேண் டும். அவர் பாக்யலட்சுமி திட் டத்தின் பயனாளி. பள்ளியிலும் ரேஷன்கார்டு கேட்கின்றனர். குள றுபடியை சரி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
உணவுத்துறை அதிகாரி எம்.எஸ்.பாட்டீல் கூறியதாவது:
தொழில்நுட்ப கோளாறால், இந்த தவறு நடந்திருக்கலாம். புகார்தாரரிடம் மனு பெற்று, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின், தொழில்நுட்ப பிரிவுக்கு அனுப்புவோம்.
எனக்கு இப்போதுதான், தகவல் தெரிந்தது. இது போன்ற பிரச்னை எங்களுக்கு வந்தது, இதுவே முதன் முறையாகும்; சரிசெய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.


