/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பங்களாகுட்டாவில் சிக்கிய மண்டை ஓடுகள் குறித்து... விசாரணை!: எஸ்.ஐ.டி., தலைவர் பிரணவ் மொஹந்திக்கு அரசு உத்தரவுபங்களாகுட்டாவில் சிக்கிய மண்டை ஓடுகள் குறித்து... விசாரணை!: எஸ்.ஐ.டி., தலைவர் பிரணவ் மொஹந்திக்கு அரசு உத்தரவு
பங்களாகுட்டாவில் சிக்கிய மண்டை ஓடுகள் குறித்து... விசாரணை!: எஸ்.ஐ.டி., தலைவர் பிரணவ் மொஹந்திக்கு அரசு உத்தரவு
பங்களாகுட்டாவில் சிக்கிய மண்டை ஓடுகள் குறித்து... விசாரணை!: எஸ்.ஐ.டி., தலைவர் பிரணவ் மொஹந்திக்கு அரசு உத்தரவு
பங்களாகுட்டாவில் சிக்கிய மண்டை ஓடுகள் குறித்து... விசாரணை!: எஸ்.ஐ.டி., தலைவர் பிரணவ் மொஹந்திக்கு அரசு உத்தரவு
ADDED : செப் 25, 2025 11:09 PM

தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலாவில், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாக, மஞ்சுநாதா கோவில் முன்னாள் துாய்மை பணியாளர் சின்னையா அளித்த புகாரில், எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தது. சின்னையா அடையாளம் காட்டிய இடங்களில் பள்ளம் தோண்டிய போது எலும்பு கூடுகள் சிக்கவில்லை.
பொய் புகார் அளித்த குற்றச்சாட்டில், சின்னையா கைது செய்யப்பட்டார். பெல்தங்கடி நீதிமன்றத்தில் சின்னையா ரகசிய வாக்குமூலம் அளித்த போது, ஒரு மண்டை ஓட்டை கொடுத்தார்.அந்த மண்டை ஓடு குறித்து எஸ்.ஐ.டி., விசாரித்த போது, தர்மஸ்தலாவில் கடந்த 2012ல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட, கல்லுாரி மாணவி சவுஜன்யாவின் மாமா விட்டல் கவுடா கொடுத்தது தெரிந்தது.
சில அடி துாரம் அவரிடம் விசாரித்த போது, மண்டை ஓட்டை தர்மஸ்தலாவின் பங்களாகுட்டா வனப்பகுதியில் இருந்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதனால், அவரை பங்களாகுட்டா அழைத்து சென்று, எஸ்.ஐ.டி., விசாரித்தது. விசாரணைக்கு பின், பங்களாகுட்டா வனப்பகுதியில் நிறைய மண்டை ஓடு, எலும்பு கூட்டை பார்த்ததாக, விட்டல் கவுடா வீடியோ வெளியிட்டு கூறினார்.
இதனால் பங்களாகுட்டாவில் சோதனை நடத்தும்படி, அதிகாரிகளுக்கு, எஸ்.ஐ.டி., தலைவர் பிரணவ் மொஹந்தி உத்தரவிட்டார். அதன்படி இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட சோதனையில் ஏழு மண்டை ஓடுகள், நுாற்றுக்கும் மேற்பட்ட எலும்புகள் சிக்கின. இவை, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. பங்களாகுட்டாவில் சின்னையா அடையாளம் காட்டிய இடத்தில் இருந்து, சில அடி துாரத்தில் மண்டை ஓடுகள், எலும்பு கூடுகள் சிக்கியது வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஓட்டுநர் உரிமம் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரை, நேற்று முன்தினம் சந்தித்த பிரணவ் மொஹந்தி, வழக்கில் இதுவரை நடந்த முன்னேற்றங்கள் பற்றி எடுத்து கூறினார். அப்போது, 'மண்டை ஓடுகள் சிக்கியது குறித்து, தீவிர விசாரணை நடத்துங்கள்.
வழக்கின் உண்மை தன்மை வெளியே வரும் வரையில், எஸ்.ஐ.டி., விசாரணை தொடரும். வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுங்கள்' என்று, அவர் உத்தரவிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், பங்களாகுட்டா வில் மண்டை ஓடுகளை எடுத்த போது, துமகூரின் குப்பியை சேர்ந்த ஆதிசேஷ நாராயணா என்பவரின், ஓட்டுநர் உரிமம் கிடைத்தது. அவரது குடும்பத்தினரை விசாரணைக்கு அதிகாரிகள் அழைத்தனர். நேற்று மாலை பெல்தங்கடி எஸ்.ஐ.டி., அலுவலகத்தில் அவர்கள் ஆஜராகினர்.
பின், ஆதிசேஷ நாராயணாவின் சகோதரி பத்மா கூறுகையில், ''கடந்த 2013ம் ஆண்டு அக்டோபர் 20ல், ஆதிசேஷ நாராயணா வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின், அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. எனது தந்தையுடன், தம்பி அடிக்கடி தகராறு செய்வார்.
''இதனால் தம்பி காணாமல் போனதும், போலீசில் தந்தை புகார் செய்யவில்லை. அவரை பற்றி எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. இப்போது பங்களாகுட்டாவில் அவரது ஓட்டுநர் உரிமம் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. அவர் இங்கு எப்படி வந்தார் என்று தெரியவில்லை,'' என்றார்.