ஒரு ரூபாய் கொடுத்து பக்தர்களை ஆசிர்வதிக்கும் குபேர மஹாலட்சுமி
ஒரு ரூபாய் கொடுத்து பக்தர்களை ஆசிர்வதிக்கும் குபேர மஹாலட்சுமி
ADDED : மே 04, 2026 10:55 PM

- நமது நிருபர் -
பெங்களூரு ரூரல் மாவட்டம் ஆனேக்கல் தாலுகா ஜிகனி அருகே கரியப்பன தொட்டி கிராமத்தில், குபேர மஹாலட்சுமி கோவில் உள்ளது. கருவறையில் ஒரே கல்லால் செதுக்கப்பட்ட, ஏழு அடி உயர சிலையில் வீற்றிருந்து பக்தர்களுக்கு, குபேர மஹாலட்சுமி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
பாதாள வராயி என்ற மற்றொரு பெயரும் இந்தக் கோவிலுக்கு உள்ளது. இக்கோவிலின் விசேஷம் என்னவென்றால், மற்ற கோவில்களில் கொடுப்பது போன்று உணவை பிரசாதமாக வழங்க மாட்டார்கள். அதற்கு பதிலாக குபேர மஹாலட்சுமி பாதத்தில் வைத்து, பூஜை செய்த ஒரு ரூபாயை பிரசாதமாக வழங்குகின்றனர்.
இந்த ஒரு ரூபாயை எடுத்து சென்று, வீட்டில் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் பண பிரச்னை ஏற்படாது என்றும், கடன் பிரச்னை நீங்கும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
ஒரு ரூபாயை வியாபாரம் செய்யும் இடத்தில் கல்லா பெட்டியில் போட்டால், வியாபாரம் பெருகும் என்றும் நம்புகின்றனர். லட்சுமி இதயத்தில் நாராயண் இருப்பது போன்று, சிலை வடிவமைக்கப்பட்டு இருப்பதும் இங்கு சிறப்பம்சமாக உள்ளது.
பல ஆண்டுகளாக திருமணமாகாமல் இருப்போர், இங்கு வந்து குபேர மஹாலட்சுமி கையில் வைத்து, பூஜிக்கப்படும் கயிறை வாங்கி சென்று, வீட்டில் பூஜை செய்து கட்டினால் திருமண வரன் கைகூடி வரும் என்ற நம்பிக்கையும் உள்ளது. கோவில் நடை தினமும் காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை திறந்து இருக்கும்.
மேலும் தகவலுக்கு தொடர்புக்கு 94482 24846
பஸ்சில் செல்லலாம்
l பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து கரியப்பன தொட்டி 37 கி.மீ., துாரத்தில் அமைந்து உள்ளது.
l மெஜஸ்டிக், கே.ஆர்.மார்க்கெட் பஸ் நிலையத்தில் இருந்து பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன.
