/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மேற்கு தொடர்ச்சி மலைகள் தன்மை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு மேற்கு தொடர்ச்சி மலைகள் தன்மை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மேற்கு தொடர்ச்சி மலைகள் தன்மை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மேற்கு தொடர்ச்சி மலைகள் தன்மை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
மேற்கு தொடர்ச்சி மலைகள் தன்மை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ADDED : ஜூன் 02, 2025 12:43 AM

பெங்களூரு: 'தென்மேற்கு பருவமழையால் குடகு, தட்சிண கன்னடாவில் நிலச்சரிவு ஏற்பட்டதை தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகள் தன்மை குறித்து ஆராய்ந்து, மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என்று துறை அதிகாரிகளுக்கு, வன அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டு உள்ளார்.
குஜராத் மாநிலத்தில் துவங்கும் மேற்கு தொடர்ச்சி மலை மஹாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரள மாநிலங்கள் வழியாக தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் நிறைவடைகிறது. கர்நாடகாவில் உத்தர கன்னடா, ஷிவமொக்கா, சிக்கமகளூரு, உடுப்பி, பெலகாவி, தட்சிண கன்னடா, ஹாசன், குடகு மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை உள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதிகளில் சாலைகள், பிற திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இது மலை தொடர் பகுதியை ஆபத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும் பயிர் சேதத்தை ஏற்படுத்துவதுடன், வனவிலங்குகளுக்கும் பிரச்னையாக உள்ளது.
கடந்த ஆண்டு கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் உயிரிழந்தனர். இதுபோன்று மேற்கு தொடர்ச்சி மலையிலும் நிலச்சரிவு ஏற்பட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படலாம் என்று வல்லுனர்கள், அரசை எச்சரித்து இருந்தனர்.
கடந்த 2018, 2019ம் ஆண்டுகளில் பெய்த, தென்மேற்கு பருவமழையால் குடகில் பெரிய அளவில் நிலச்சரிவில், உயிரிழப்புகள் ஏற்பட்டன.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு தட்சிண கன்னடா மாவட்டத்தில் பெய்த கனமழையால் மங்களூரில் இரண்டு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு வீடுகள் இடிந்ததில் நான்கு பேர் உயிரிழந்தனர்.
இதனால் சுதாரித்து கொண்ட வன அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, மேற்கு தொடர்ச்சி மலையின் தன்மை குறித்து ஆய்வு செய்து, மூன்று மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி தனது துறை அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டார்.