/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஜாமின் கிடைக்காமல் பிரஜ்வல் பரிதவிப்பு ஜாமின் கிடைக்காமல் பிரஜ்வல் பரிதவிப்பு
ஜாமின் கிடைக்காமல் பிரஜ்வல் பரிதவிப்பு
ஜாமின் கிடைக்காமல் பிரஜ்வல் பரிதவிப்பு
ஜாமின் கிடைக்காமல் பிரஜ்வல் பரிதவிப்பு
ADDED : ஜூன் 02, 2025 12:43 AM

பெங்களூரு: முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, சிறைக்கு சென்று ஓராண்டு நிறைவடைந்தும், ஜாமின் கிடைக்காமல் பரிதவிக்கிறார்.
ஹாசன் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, லோக்சபா தேர்தல் வேளையில் ஆபாச வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடந்த ஆண்டு 2024 மே 31ல் அவரை விமான நிலையத்தில் வைத்து, போலீசார் கைது செய்தனர். அன்று முதல் சிறையில் அடைபட்டுள்ளார்.
பிறந்ததில் இருந்து, ஆடம்பரமாக ஆள் பலம், பண பலத்துடன் வாழ்ந்த பிரஜ்வல், சிறைக்கு சென்று, நேற்று முன் தினத்துடன் ஓராண்டு நிறைவடைந்தது. இவர், தற்போது அமைதியாக நாட்களை கடத்துகிறார்.
ஏதாவது பிரச்னை செய்தால், ஜாமின் கிடைப்பது கஷ்டம் என்பதால், அடக்கி வாசிக்கிறார்.
தினமும் மூன்று வேளை, வீட்டில் இருந்து உணவு வருகிறது. வாரம் இரண்டு முறை அசைவ உணவு. தினமும் காலையில் சிறையில் வாக்கிங் செல்கிறார். அறைக்குள் யோகா, உடற்பயிற்சி செய்கிறார். தினமும் நாளிதழ் படிக்கிறார். கவிதை புத்தகங்கள் வாசிக்கிறார்.
இவர் ஜாமின் கோரி, பல முறை மனு தாக்கல் செய்தும், மனுக்கள் தள்ளுபடியாகின. மகனை எப்படியாவது சிறையில் இருந்து, வெளியே அழைத்து வர வேண்டும் என, இவரது பெற்றோர் போராடுகின்றனர். ஆனால் இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை.
இவர் பெண்களை பலாத்காரம் செய்ததற்கான, அனைத்து ஆதாரங்களும் உள்ளன. இவரது கார் ஓட்டுநர் அளித்த சாட்சியங்களும் இவருக்கு எதிராகவே உள்ளன. வீடியோவில் இருந்த குரலும், இவருடையதே என்பதை தடயவியல் ஆய்வகம் உறுதி செய்துள்ளது. எனவே இவருக்கு ஜாமின் கிடைப்பது சந்தேகம் என, தகவல் வெளியாகியுள்ளது.