Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ போலீஸ் விசாரணைக்கு ஊர்வலம்: பா.ஜ., கொறடா ரவிகுமார் அதிரடி

போலீஸ் விசாரணைக்கு ஊர்வலம்: பா.ஜ., கொறடா ரவிகுமார் அதிரடி

போலீஸ் விசாரணைக்கு ஊர்வலம்: பா.ஜ., கொறடா ரவிகுமார் அதிரடி

போலீஸ் விசாரணைக்கு ஊர்வலம்: பா.ஜ., கொறடா ரவிகுமார் அதிரடி

ADDED : ஜூன் 03, 2025 01:58 AM


Google News
Latest Tamil News
கலபுரகி: கலபுரகியில் திரங்கா யாத்திரை நடத்த வந்த மேல்சபை எதிர்க்கட்சித் தலைவர் சலவாதி நாராயணசாமிக்கு உரிய பாதுகாப்பு வழங்கவில்லையென கூறி, மாவட்ட கலெக்டர் பவுசியா தரணுமை, பாகிஸ்தானை சேர்ந்தவர் என்று மேல்சபை பா.ஜ., கொறடா விமர்சித்திருந்தார்.

இதற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. ஸ்டேஷன் பஜார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதை கர்நாடக உயர் நீதிமன்றம், மே 29ல் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு, 'கலெக்டரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். ஜூன் 2ம் தேதி போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும்' என, ரவிகுமாருக்கு உத்தரவிட்டிருந்தது.

இதற்கு ரவிகுமாரும், 'எந்த உள்நோக்கத்திலும் நான் பேசவில்லை. பேசும் போது தவறி கூறிவிட்டேன்' என்று கூறியிருந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, நேற்று காலை கலபுரகி தெற்கு உதவி கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று தன் ஆதரவாளர்களுடன் ரவிகுமார் காரில் வந்தார்.

கலெக்டர் அலுவலகம் முன் காரில் இருந்து இறங்கிய அவர், தன் ஆதரவாளர்களுடன் 2 கி.மீ., தொலைவில் உள்ள உதவி கமிஷனர் அலுவலகத்திற்கு ஊர்வலமாக நடந்து சென்றார். அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டபடி சென்றனர்.

அப்போது பா.ஜ., பிரமுகர் ராஜ்குமார் பாட்டீல் டெல்குரா, 'கலபுரகியில் என்ன நடக்கிறது; நாங்கள் என்ன பயங்கரவாதிகளா? எதற்காக இவ்வளவு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்? பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்புவோருக்கு பாதுகாப்பு கொடுங்கள்' என கோஷமிட்டார்.

பின், ரவிகுமார் உதவி போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு சென்றார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us