தணிக்கை அறிக்கை அக்., 31 வரை அவகாசம்
தணிக்கை அறிக்கை அக்., 31 வரை அவகாசம்
தணிக்கை அறிக்கை அக்., 31 வரை அவகாசம்
ADDED : செப் 26, 2025 01:13 AM

புதுடில்லி:வருமான வரி தணிக்கை அறிக்கையை தாக்கல் செய்வதற்கான அவகாசத்தை, அக்டோபர் 31ம் தேதி வரை நீட்டித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டு விற்பனை, 1 கோடி ரூபாய்க்கு மேல் செய்யும் நிறுவனங்கள், வரி தணிக்கை அறிக்கையை சமர்ப்பிப்பது கட்டாயமாகும். வரும் 30ம் தேதியுடன் வரி தணிக்கை அறிக்கை சமர்பிக்க அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு மற்றும் தொழில்நுட்ப கோளாறு, பண்டிகை காலம் ஆகியவை காரணமாக அவகாசத்தை நீட்டிக்க பட்டய கணக்காளர்கள், வரி ஆலோசகர்கள் கூட்டமைப்புகள் வலியுறுத்தி இருந்தன.
ராஜஸ்தான், கர்நாடக உயர் நீதிமன்றங்களும் தணிக்கை அறிக்கை தாக்கலுக்கான அவகாசத்தை நீட்டிக்க உத்தரவிட்டு இருந்த நிலையில், மத்திய நேரடி வரிகள் வாரியம் நாடு முழுதும் அவகாசத்தை நீட்டித்து உள்ளது.