வெள்ளி நகைகள் இறக்குமதி புதிய கட்டுப்பாடுகள் அமல்
வெள்ளி நகைகள் இறக்குமதி புதிய கட்டுப்பாடுகள் அமல்
வெள்ளி நகைகள் இறக்குமதி புதிய கட்டுப்பாடுகள் அமல்
ADDED : செப் 26, 2025 01:14 AM

புதுடில்லி:உள்நாட்டு தொழில்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக, வெள்ளி நகைகள் இறக்குமதிக்கு, மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த கட்டுப்பாடுகள், வரும் 2026, மார்ச் 31 வரை தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் வரையிலான காலத்தில், குறிப்பாக, வெள்ளி விலை அதிகரிக்க துவங்கியதில் இருந்து, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை பயன்படுத்தி அதிகளவில் வெள்ளி நகைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
இதனால், உள்நாட்டில் வெள்ளி நகை தயாரிப்பாளர்கள் பாதிப்பை சந்தித்ததோடு, வேலைவாய்ப்பு குறைந்து வருவதாக புகார் எழுந்தது.
இதனையடுத்து, உள்நாட்டு தயாரிப்பாளர்களை பாதுகாக்கும் வகையில், வெள்ளி நகைகள் இறக்குமதி செய்ய, குறிப்பிட்ட கால அடிப்படையில் அதிகபட்ச வரம்பு நிர்ணயிக்கவும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் கட்டுப்பாடுகள் விதித்து உத்தரவிட்டுள்ளது.