பொருளாதார வளர்ச்சி 6.50% எஸ். அண்டு பி., கணிப்பு
பொருளாதார வளர்ச்சி 6.50% எஸ். அண்டு பி., கணிப்பு
பொருளாதார வளர்ச்சி 6.50% எஸ். அண்டு பி., கணிப்பு
ADDED : செப் 24, 2025 01:44 AM
நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.50 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பை எஸ். அண்டு பி., மாற்றமின்றி அறிவித்துள்ளது.
வலுவான உள்நாட்டு தேவை, அதிகரிக்கும் முதலீடு மற்றும் அரசின் வரி சீர்திருத்தங்கள் ஆகியவை இதற்கு வழிவகுக்கும் என அது தெரிவித்துள்ளது. வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நாடாக இந்தியா தொடரும் என்றும்; நுகர்வும், மூலதன செலவினமும் முக்கிய உந்துசக்தியாக விளங்கும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, உணவுப் பொருட்களின் விலை குறைவால், நடப்பு நிதியாண்டில் பணவீக்கம் 3.20 சதவீதமாக குறையும் என்றும் எஸ். அண்டு பி., கணித்துள்ளது.