ஒரே இடத்தில் நான்கு கண்காட்சிகள் 'யார்னெக்ஸ் -2025' நாளை துவக்கம்
ஒரே இடத்தில் நான்கு கண்காட்சிகள் 'யார்னெக்ஸ் -2025' நாளை துவக்கம்
ஒரே இடத்தில் நான்கு கண்காட்சிகள் 'யார்னெக்ஸ் -2025' நாளை துவக்கம்
UPDATED : செப் 24, 2025 01:51 AM
ADDED : செப் 24, 2025 01:43 AM

திருப்பூர்:திருப்பூரில், ஒரே இடத்தில், நுால், துணி, சாயம் மற்றும் ஆடைகள் என, ஜவுளித்துறையினருக்கான நான்கு வகையான கண்காட்சி, நாளை துவங்குகிறது.
![]() |
நம் நாடு முழுதும் உள்ள ஜவுளி தொழில்துறையினர் பயன்பெறும் வகையில், திருப்பூர் உட்பட, முக்கிய தொழில் நகரங்களில், 'யார்னெக்ஸ்' கண்காட்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. நடப்பாண்டு, திருப்பூர் ஐ.கே.எப்., வளாகத்தில், ஒட்டுமொத்த ஜவுளி தொழில்துறையினரும் பயன்பெறும் வகையில், நான்கு கண்காட்சிகள் நடக்க உள்ளன.
நுால் ரகங்களை காட்சிப்படுத்தும் 'யார்னெக்ஸ் - 2025' கண்காட்சி, துணி ரகங்களை காட்சிப்படுத்தும், 'டெக்ஸ் இந்தியா' கண்காட்சி, ஜவுளித்துறைக்கான சாயங்களை காட்சிப்படுத்தும், 'டைகெம் டெக்ஸ் பிராசசிங்' கண்காட்சி, ஆயத்தஆடை உற்பத்தி சேவைக்கான 'அப்பேரல் சோர்சிங்' கண்காட்சி என, நான்கு கண்காட்சிகள் ஒரே இடத்தில் நடக்கின்றன.
![]() |
திருப்பூரில் நாளை துவங்கி மூன்று நாட்கள் நடக்கும் இக்கண்காட்சிகளில், 319 அரங்குகள் இடம்பெறுகின்றன.
தினமும் காலை, 10:00 முதல் மாலை, 7:00 மணி வரை நடக்கவுள்ள இக்கண்காட்சியில், நுால் உட்பட மூலப்பொருட்களில் துவங்கி, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட ஆடைகள் வரையிலான, அனைத்து உற்பத்தி சேவையும், ஒரே இடத்தில் கிடைக்கும்.
இதுகுறித்து கண்காட்சி அமைப்பாளர்கள் கூறுகையில், 'ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், ஆடை பிராண்டுகள், ஆடை வடிவமைப்பாளர்கள், தனியார் 'லேபிள்' உற்பத்தியாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், பேஷன் வடிவமைப்பாளர்கள், வர்த்தக முகவர்கள் என, பல்வேறு மாநிலங்களில் இருந்து, கண்காட்சியை பார்வையிட ஏராளமானோர் பதிவு செய்துள்ளனர்' என்றனர்.
என்ன கண்காட்சிகள்
நுால் ரகங்களை காட்சிப்படுத்தும் 'யார்னெக்ஸ் -2025'
துணி ரகங்களை காட்சிப்படுத்தும் 'டெக்ஸ் இந்தியா'
ஜவுளி துறை சாயங்களை காட்சிப்படுத்தும் 'டைகெம் டெக்ஸ் பிராசசிங்'
ஆயத்த ஆடை உற்பத்தி சேவைக்கான 'அப்பேரல் சோர்சிங்'