நீராவி ஆற்றல் இழப்பை குறைக்க சென்னை ஐ.ஐ.டி., ஸ்டார்ட்அப் தீர்வு
நீராவி ஆற்றல் இழப்பை குறைக்க சென்னை ஐ.ஐ.டி., ஸ்டார்ட்அப் தீர்வு
நீராவி ஆற்றல் இழப்பை குறைக்க சென்னை ஐ.ஐ.டி., ஸ்டார்ட்அப் தீர்வு
ADDED : செப் 24, 2025 01:26 AM
சென்னை:சென்னை ஐ.ஐ.டியின், தொழில் ஊக்குவிப்பு திட்டமான 'இன்குபேட்டட் டீப் டெக் ஸ்டார்ட்அப்' திட்டத்தின் கீழ் ஆராய்ச்சியில் ஈடுபட்ட, வான்கெல் எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனம், பாய்லர் தொழிற்சாலையில், ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பத்தை புகுத்தி சாதித்துள்ளது.
பல்வேறு தொழில் சார்ந்த தொழிற்சாலைகளில், 'பாய்லர்' எனும் கொதிகலன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இதில், நீராவி வெளியேறுவதால், ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது. அந்த வகையில், நாட்டில் உள்ள 45,000க்கும் மேற்பட்ட பாய்லர்களின் வாயிலாக, ஒரு வால்வுக்கு, 160 கி.வோ., வீதம், ஒவ்வொரு ஆண்டும், 66,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வெப்ப ஆற்றல் இழப்பு ஏற்படுகிறது.
இதை குறைக்கும் வகையில், ஐ.ஐ.டி., பேராசிரியர் சங்கரராமன் தலைமையில் சென்னை ஐ.ஐ.டி.,யின் தொழில் ஊக்குவிப்பு திட்டத்தில் சேர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட வான்கெல் எனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனம், 20க்கும் மேற்பட்ட காப்புரிமை பெற்ற புதிய தொழில்நுட்பங்களின் வாயிலாக, 'பீனிக்ஸ் எக்ஸ்பாண்டர் ரோட்டரி' சாதனத்தின் வாயிலாக தீர்வு கண்டுள்ளது.
இதையடுத்து, அந்த நிறுவனம், தொழில் நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதன் வாயிலாக தொழிற்சாலைகளுக்கு இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டையும் அது பெற்றுள்ளது.