பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு வட மாநிலங்களில் சந்தை வாய்ப்பு
பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு வட மாநிலங்களில் சந்தை வாய்ப்பு
பின்னலாடை உற்பத்தியாளர்களுக்கு வட மாநிலங்களில் சந்தை வாய்ப்பு
ADDED : செப் 25, 2025 02:26 AM

திருப்பூர்:உள்நாட்டு பின்னலாடை உற்பத்தியாளர்கள், வடமாநில சந்தை வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என, இந்திய துணி உற்பத்தியாளர்கள் சங்கமான சி.எம்.ஏ.ஐ., அழைப்பு விடுத்துள்ளது.
நாடு முழுதும் உள்ள, 20 ஆயிரம் நிறுவனங்களை உறுப்பினராக கொண்ட சி.எம்.ஏ.ஐ., அமைப்பு.
மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. ஆயத்த ஆடை உற்பத்தியாளர், துணி உற்பத்தியாளர், ஏற்றுமதியாளர்கள், மொத்த வர்த்தகர்கள், சில்லரை வர்த்தகர்கள் என, அனைத்து தரப்பையும் ஒருங்கிணைத்து, ஓர் அமைப்பாக இயங்கி வருகிறது. வர்த்தக வாய்ப்புகளை பரவலாக்கும் வகையில், முக்கிய தொழில் நகரங்களில், தேசிய அளவிலான ஜவுளி கண்காட்சியை நடத்தி வருகிறது.
திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர், அக்கண்காட்சிகளில் பங்கேற்பதன் வாயிலாக, வடமாநிலங்களில் புதிய சந்தை வாய்ப்புகளை பெறலாம் என்று, திருப்பூர் தொழில் அமைப்புகளை சந்தித்து சங்கத்தினர் பேசி வருகின்றனர். நாடு முழுதும் உள்ள ஜவுளித்துறையினர், வர்த்தகர்கள் பங்கேற்கும் இந்திய பின்னலாடை கண்காட்சி, நவ., 25ம் தேதி துவங்கி, 3 நாள், டில்லியில் நடக்கிறது.
கண்காட்சி வாயிலாக, பருத்தி நுாலிழை பின்னலாடை மற்றும் உள்ளாடைகள் வர்த்தகத்தை ஈர்க்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.