ஸ்டார்ட்அப் சிங்கம் சீசன் - 2 75 நிறுவனங்கள் தேர்வு
ஸ்டார்ட்அப் சிங்கம் சீசன் - 2 75 நிறுவனங்கள் தேர்வு
ஸ்டார்ட்அப் சிங்கம் சீசன் - 2 75 நிறுவனங்கள் தேர்வு
ADDED : செப் 25, 2025 02:27 AM

சென்னை:தொழில் முனைவோருக்கு உதவும் தொலைக்காட்சி நிகழ்ச்சியான ஸ்டார்ட்அப் சிங்கம், இரண்டாம் சீஸன் ஜன., மாதம் துவங்க உள்ளது.
'ஸ்டார்டஅப் சிங்கம்' என்ற நிகழ்ச்சி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இதில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு முதலீடு உதவி வழங்கப்பட்டது. அதாவது, பலர் கனவுகளுடன் ஸ்டார்ட்அப் துவங்க வேண்டும் என நினைப்பர், அவர்களுக்கு முதலீடு செய்ய வசதி இருக்காது, நல்ல ஐடியாக்கள் இருக்கும்.
இப்படிப்பட்டவர்களை தேர்வு செய்து முதலீட்டாளர்களுடன் இணைத்து தொழில் செய்ய உதவுவதே பான்ஹெம் வென்ச்சர்ஸின் ' ஸ்டார்ட்அப் சிங்கம்' நிகழ்ச்சியின் நோக்கம்.
ஸ்டார்டப் சிங்கம் இரண்டாம் சீசன் அடுத்தாண்டு ஜனவரி 26ம் தேதியில் துவங்குகிறது. இதற்கு நாடு முழுதும் இருந்து 2,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் விண்ணப்பித்து உள்ளன. அதில் தகுதியுள்ள 75 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.