Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி 'கீசர்' வாயு கசிவால் மரணமா?

ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி 'கீசர்' வாயு கசிவால் மரணமா?

ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி 'கீசர்' வாயு கசிவால் மரணமா?

ஒரே குடும்பத்தில் 4 பேர் பலி 'கீசர்' வாயு கசிவால் மரணமா?

ADDED : ஜூன் 16, 2024 01:14 AM


Google News
சூரத், குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் இறந்து கிடந்தனர். காஸ் கீசரில் ஏற்பட்ட கசிவால் அவர்கள் மூச்சுத் திணறி இறந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

குஜராத்தின் சூரத் நகரைச் சேர்ந்தவர் ஜாசுபென் வாதேல், 58. இவர், அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்தார்.

இவருடன் இவரது சகோதரிகள் சாந்தாபென் வாதேல், 53, கவுரிபென் மேவாத், 55, மற்றும் அவரது கணவர் ஹிராபாய், 60, ஆகியோரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு நான்கு பேரும் உறங்கச் சென்ற நிலையில், வெளியூர் சென்ற ஜாசுபென்னின் மகன் நேற்று காலை அங்கு வந்தார்.

வீட்டிற்குள் இருந்த அனைவரும் மயங்கிய நிலையில் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், போலீசாருக்கு தகவல் அளித்தார். இதன்படி அங்கு வந்த போலீசார், மயக்க நிலையில் இருந்த நான்கு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில், அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் பரத் கூறியதாவது:

இறந்த நபர்கள் தங்கள் வீட்டில் எல்.பி.ஜி., காஸ் வாயிலாக இயங்கும், 'கீசர்' எனப்படும் தண்ணீரை சுட வைக்கும் கருவியை பயன்படுத்தி வந்துள்ளனர்.

சம்பவம் நடந்த அன்று இரவு, அதை நிறுத்தாமல் அவர்கள் உறங்கி உள்ளனர். அதில் இருந்து வெளியான வாயுவை சுவாசித்ததால், அனைவரும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். எனினும், பிரேத பரிசோதனை முடிவுக்குப்பின் தான் முழுவிபரம் தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us