Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/43-வது உலகசுகாதார போட்டி: 4 இந்திய அதிகாரிகள் 32 பதக்கங்கள் வென்று சாதனை

43-வது உலகசுகாதார போட்டி: 4 இந்திய அதிகாரிகள் 32 பதக்கங்கள் வென்று சாதனை

43-வது உலகசுகாதார போட்டி: 4 இந்திய அதிகாரிகள் 32 பதக்கங்கள் வென்று சாதனை

43-வது உலகசுகாதார போட்டி: 4 இந்திய அதிகாரிகள் 32 பதக்கங்கள் வென்று சாதனை

UPDATED : ஜூன் 23, 2024 07:38 PMADDED : ஜூன் 23, 2024 07:32 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: பிரான்ஸ்சில் நடைபெற்ற 43-வது உலக சுகாதார போட்டியில் 4 இந்திய அதிகாரிகள் 32 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

பிரான்ஸ்நாட்டின் செயின்ட்ட்ரோபஸ் நகரில் கடந்த 16-ம் தேதி முதல் 23-ம் தேதி வரையில் 43-வது உலக சுகாதரப்போட்டிகள் நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து 50க்கும் மேற்பட்ட நாடுகளின் சார்பில் 2500க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியாவின் சார்பில் கலந்து கொண்ட ஒரு பெண் அதிகாரி உட்பட நான்கு ராணுவ மருத்துவ அதிகாரிகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு 19 தங்கம், ஒன்பது வெள்ளி,நான்கு வெண்கலப்பதக்கங்கள் என மொத்தம் 32 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர்.

ராணுவ லெப்டினன்ட் கர்னல் சஞ்சீவ் மாலிக்800 மீ, 1500 மீ, 3000 மீ, 5000 மீ, கிராஸ் கன்ட்ரி மற்றும் 4x100 மீ ரிலே ஆகிய போட்டிகளில் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்றார்.

மேஜர் அனிஷ் ஜார்ஜ் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் 100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500 மீ, 5000 மீ, ஈட்டி எறிதல், வட்டு எறிதல், சுத்தியல் எறிதல் மற்றும் பவர் லிஃப்டிங் ஆகிய போட்டிகளில் நான்கு தங்கம், ஆறு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றார்.

100மீ, 200மீ, 400மீ, நீளம் தாண்டுதல், சுத்தியல் எறிதல், 4x100மீ தொடர் ஓட்டம் ஆகிய பிரிவுகளில் 35 வயது ஆண்கள் பிரிவில் கேப்டன் ஸ்டீபன் செபாஸ்டியன் ஆறு தங்கப் பதக்கங்களையும் வென்றார்.

பெண்கள் பிரிவில் கேப்டன் டேனியா ஜேம்ஸ் 100 மீ, 200 மீ, 4x100 ரிலே, ஈட்டி எறிதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், பூப்பந்து தனி, பூப்பந்து இரட்டையர் மற்றும் பவர் லிஃப்டிங் பிரிவில் நான்கு தங்கம், மூன்று வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களையும் வென்றார்.

போட்டியில் கலந்து கொண்டு பரிசுகளை வென்ற போட்டியாளர்களை ஆயுதப்படை மருத்துவ சேவை (டிஜிஏஎப்எம்எஸ்) லெப்டினன்ட் ஜெனரல் தல்ஜித்சிங் பாராட்டு தெரிவித்தார். அவர் விடுத்துள்ள செய்தியில் இந்திய ஆயுதப்படை மருத்துவ சேவை அதிகாரிகளின் செயல்பாடுகள் அவர்களின் சிறப்பை உயர்த்தி காட்டுவது மட்டுமின்றி, உலக அளவில் சுகாதார நிபுணர்களின் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்துவதாகவும் உள்ளது. , அவர்களின் மருத்துவ நிபுணத்துவத்தை தடகள சாதனைகளுடன் கலந்துள்ளது.

இது நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை உடற்தகுதியின் தூதர்களாக இருப்பதற்கு ஊக்கமளிக்கும் என்றும் எதிர்காலத்தில் மேலும் பலவிருதுகளையும்பெற வேண்டும் என வாழ்த்து செய்தியில் தெரிவித்து உள்ளார்.

மேற்கண்ட விளையாட்டு உலக மருத்துவ மற்றும் சுகாதார விளையாட்டுகள், பெரும்பாலும் சுகாதார நிபுணர்களுக்கான ஒலிம்பிக் விளையாட்டுகளாகக் கருதப்படுகின்றன, இது மருத்துவ சமூகத்தில் மிகவும் மதிப்புமிக்க உலகளாவிய விளையாட்டு நிகழ்வாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us