வாரத்தில் 6 நாள் முட்டை மது பங்காரப்பா ஒப்பந்தம்
வாரத்தில் 6 நாள் முட்டை மது பங்காரப்பா ஒப்பந்தம்
வாரத்தில் 6 நாள் முட்டை மது பங்காரப்பா ஒப்பந்தம்
ADDED : ஜூலை 14, 2024 05:35 AM

ஷிவமொகா, : ''அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் மாணவர்களுக்கு முட்டை வழங்க, அஜிம் பிரேம்ஜி அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது,'' என, மாநில துவக்க கல்வி துறை அமைச்சர் மதுபங்காரப்பா தெரிவித்தார்.
ஷிவமொகா மாவட்டம், சொரபாவில் தாலுகா பஞ்சாயத்து அலுவலகத்தில் அதிகாரிகளுடன், அமைச்சர் மது பங்காரப்பா, தாலுகா முன்னேற்ற ஆய்வுக் கூட்டம் நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஆறு நாட்கள் முட்டை வழங்க, அஜிம் பிரேம்ஜி அறக்கட்டளையுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் இருக்கும். இதற்காக, 1,500 கோடி ரூபாய் கூடுதல் செலவை அரசு ஏற்கும்.
பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை காக்கும் வகையில், சத்தான உணவு வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. தினமும் காலையில் 55 லட்சம் குழந்தைகளுக்கு சிறுதானிய பால் வழங்கப்பட்டு வருகிறது.
சொரபா தாலுகாவில் ஏற்கனவே, 95 சதவீத ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. சொரபா, ஷிரளகொப்பா, ஆனவட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 354 கிராமங்களுக்கு, சராவதி ஆற்றில் இருந்து சுத்தமாக குடிநீர் வழங்க, 600 கோடி ரூபாயில் திட்டம் தயாரிக்கப்பட்டு, விரைவில் துவக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.