ADDED : ஜூலை 14, 2024 05:54 AM
பெங்களூரு, : கர்நாடகாவில் டெங்கு பாதித்தோரின் எண்ணிக்கை, 9,082 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகாவில் கடந்த ஒரு மாதமாக டெங்கு பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சுகாதாரத் துறை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் பாதிப்பு குறைந்தபாடில்லை.
மாநிலத்தில் நேற்று ஒரே நாளில், காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த 2,557 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 1,242 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு - 202; தார்வாட், ஹாசன், மாண்டியா, தட்சிண கன்னடாவில் தலா - 20; கோலார், சித்ரதுர்காவில் தலா - 17; ஷிவமொகா - 16; துமகூரு, பாகல்கோட், கலபுரகி தலா - 12 உட்பட 424 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம், மாநிலத்தின் டெங்கு பாதித்தோரின் எண்ணிக்கை, 9,082 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், தட்சிண கன்னடா மாவட்டம், பன்ட்வால் தாலுகா, சம்பூர் கிராமத்தைச் சேர்ந்த யதீஷ், 50, என்பவர் டெங்கு பாதிப்புக்கு நேற்று உயிரிழந்தார்.