கலால் துறைக்கு ரூ.517 கோடி இழப்பு
கலால் துறைக்கு ரூ.517 கோடி இழப்பு
கலால் துறைக்கு ரூ.517 கோடி இழப்பு
ADDED : ஜூலை 14, 2024 05:54 AM
பெங்களூரு, : பண்டிகை, தேர்தல் என, பல்வேறு காரணங்களை காண்பித்து, மது விற்பனைக்கு தடை விதித்ததால், அரசுக்கு 517 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக அரசின் கருவூலத்தை நிரப்புவதில், கலால்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. ஆண்டுதோறும் நிர்ணயித்த இலக்கை தாண்டி, வருவாய் வசூலிக்கும் துறைகளில், இதுவும் ஒன்றாகும்.
கடந்த 2023 - 24ம் ஆண்டில் முதல்வர் சித்தராமையா, கலால்துறைக்கு 36,000 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயித்திருந்தார். ஆனால் 2023 - 24ம் ஆண்டில் திருவிழாக்கள், கண்காட்சிகள், தேர்தல், ஓட்டு எண்ணிக்கை உட்பட பல்வேறு காரணங்களால் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
இதனால் அரசு கருவூலத்துக்கு, 517.30 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வாக்குறுதித் திட்டங்களுக்கு அதிகமான நிதி தேவைப்படுவதால், 2024 - 25ன் பட்ஜெட்டில், கலால் துறைக்கு 38,525 கோடி ரூபாய் வருவாய் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதை எட்ட முடியுமா என அதிகாரிகள் கவலையில் உள்ளனர்.