வழக்கறிஞரை அதிகமுறை சந்திக்க அனுமதியுங்கள்: கெஜ்ரிவால் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
வழக்கறிஞரை அதிகமுறை சந்திக்க அனுமதியுங்கள்: கெஜ்ரிவால் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
வழக்கறிஞரை அதிகமுறை சந்திக்க அனுமதியுங்கள்: கெஜ்ரிவால் மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவு
ADDED : ஜூலை 08, 2024 02:45 PM

புதுடில்லி: திகார் சிறையில் உள்ள டில்லி முதல்வர் கெஜ்ரிவால், தன் வழக்கறிஞரை அதிக முறை சந்திக்க அனுமதி அளிக்க கோரி தொடர்ந்த வழக்கில், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் 5 நாட்களில் பதிலளிக்க டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டில்லி முதல்வர் கெஜ்ரிவால், மதுபான கொள்கை மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது ஜாமின் மனு விசாரணையில் உள்ளது. சி.பி.ஐ., அதிகாரிகளும் வழக்குப்பதிவு செய்து கெஜ்ரிவாலை ஜூன் 26ம் தேதி திகார் சிறையில் வைத்து கைது செய்தனர்.
இந்நிலையில், தன் வழக்கறிஞரை அதிக முறை சந்திக்க அனுமதி அளிக்க கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவில், ‛காணொளி மூலம் தமது வழக்கறிஞருடன் மேலும் 2 முறை பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும்' என கெஜ்ரிவால் கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள், '' இது தொடர்பாக திகார் சிறை அதிகாரிகள் மற்றும் அமலாக்கத்துறையினர் 5 நாட்களில் பதிலளிக்க வேண்டும்'' என உத்தரவிட்டனர்.