தண்ணீர் வீணாவதை தடுக்க விரைவு நடவடிக்கை குழுக்கள் நியமனம்
தண்ணீர் வீணாவதை தடுக்க விரைவு நடவடிக்கை குழுக்கள் நியமனம்
தண்ணீர் வீணாவதை தடுக்க விரைவு நடவடிக்கை குழுக்கள் நியமனம்
ADDED : ஜூன் 13, 2024 02:24 AM
புதுடில்லி:சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து நகர் முழுவதும் வினியோகம் செய்யப்படும் தண்ணீர் குழாய்களில் இருந்து கசிவு ஏற்படுவதை கண்காணிக்க குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
தண்ணீர் வினியோகம் குறித்து மாநில நீர்வளத்துறை அமைச்சர் ஆதிஷி, தன்னுடைய அதிகாரப்பூர்வ 'எக்ஸ்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:
தண்ணீர் பற்றாக்குறை இருக்கும் நேரத்தில் ஒரு சொட்டுத் தண்ணீரைக் கூட வீணாவதை ஏற்க முடியாது. சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து நகர் முழுவதும் வினியோகிக்க தண்ணீர் கொண்டு செல்லப்படும் பெரிய பெரிய குழாய்களில் கசிவு ஏற்படுவதை கண்காணிக்க வேண்டும்.
இதற்காக கூடுதல் மாவட்ட ஆட்சியர்கள் அல்லது உதவி ஆட்சியர்கள் மட்டத்திலான அதிகாரிகள், தாசில்தார்கள் ஆகியோரைக் கொண்ட விரைவு நடவடிக்கை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
டேங்கர் தண்ணீர் வினியோகம் செய்வதை நிர்வகிக்கவும் தண்ணீர் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் இந்த குழுக்களே பொறுப்பு.
தகவல் கிடைத்த 12 மணி நேரத்திற்குள் குழாய்களில் ஏற்பட்ட தண்ணீர் கசிவை சரி செய்ய நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அதுதொடர்பான அறிக்கையை ஒவ்வொரு நாளும் மாலை 5:00 மணிக்குள் சமர்ப்பிக்கும்படி, மாநில தலைமைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்தப் பதிவில் அமைச்சர் கூறியுள்ளார்.