ஆம்ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தை காலி செய்ய ஆகஸ்ட் 10ம் தேதி வரை காலக்கெடு
ஆம்ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தை காலி செய்ய ஆகஸ்ட் 10ம் தேதி வரை காலக்கெடு
ஆம்ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தை காலி செய்ய ஆகஸ்ட் 10ம் தேதி வரை காலக்கெடு
ADDED : ஜூன் 10, 2024 12:43 PM

புதுடில்லி: டில்லியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தை காலி செய்ய, ஆகஸ்ட் 10ம் தேதி வரை காலக்கெடு வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லி உயர் நீதிமன்ற வளாக விரிவாக்கத்துக்காக, தற்போது ஆம் ஆத்மி அலுவலகம் உள்ள, ரோஸ் அவென்யூ அலுவலகம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 15ம் தேதிக்குள் காலி செய்யும்படி, ஆம் ஆத்மிக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கெடு விதித்திருந்தது. ஆனால் கால அவகாசத்தை நீட்டித்து தரும் படி, உச்சநீதிமன்றத்தில் ஆம்ஆத்மியினர் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி தலைமை அலுவலகத்தை காலி செய்ய, ஆகஸ்ட் 10ம் தேதி வரை காலக்கெடு வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுடில்லி மற்றும் பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும், டில்லி முதல்வராகவும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஆம் ஆத்மிக்கு தேசிய கட்சி அந்தஸ்து கிடைத்தது.
இதைத் தொடர்ந்து, தேசிய கட்சிகளுக்கு டில்லியில் அலுவலகம் கட்டுவதற்கான நிலத்தை ஒதுக்கும்படி, ஆம் ஆத்மி ஆம் ஆத்மி சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.