விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000: பிரதமர் மோடி போட்ட முதல் கையெழுத்து
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000: பிரதமர் மோடி போட்ட முதல் கையெழுத்து
விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000: பிரதமர் மோடி போட்ட முதல் கையெழுத்து
UPDATED : ஜூன் 10, 2024 12:49 PM
ADDED : ஜூன் 10, 2024 12:03 PM

புதுடில்லி: 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற நரேந்திர மோடி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி ஒதுக்கீடு செய்யும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி, தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார். நரேந்திர மோடிக்கு நேற்று (ஜூன் 9) ஜனாதிபதி திரவுபதி பதவி பிரமாணம் செய்துவைத்தார். இதனைத்தொடர்ந்து இன்று, சவுத்பிளாக்கில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இருக்கையில் அமர்ந்து முறைப்படி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். பொறுப்பேற்றுக்கொண்டதும் முக்கிய ஆவணங்களில் கையெழுத்திட்டு, தனது அலுவல் பணிகளை துவக்கினார்.
பிரதமர் மோடி, விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 நிதி ஒதுக்கீடு செய்யும் கோப்பில் முதல் கையெழுத்திட்டார். அதன்படி, 9.3 கோடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.20 ஆயிரம் கோடி தொகையை பிரதமர் மோடி விடுவித்தார். மோடியின் வாக்குறுதிகளில் ஒன்றான, விவசாயிகளுக்கு நிதி வழங்கும் இந்த திட்டத்தின்கீழ், 17வது தவணையாக இந்த தொகை விடுவிக்கப்படுகிறது.
அர்ப்பணிப்பு
முதல் கையெழுத்திட்ட பிறகு பிரதமர் மோடி தெரிவிக்கையில், ''விவசாயத்துறையின் வளர்ச்சிக்காக மேலும் கடுமையாக பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம். விவசாயிகளின் நலனிற்காக தங்களது அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட முடிவு செய்துள்ளது,'' என்றார்.