கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் மாயம்
கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் மாயம்
கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 6 பேர் மாயம்
ADDED : ஜூன் 16, 2024 03:54 PM

பாட்னா: பீஹாரில் கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. படகில் பயணம் செய்த 17 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 6 பேரை தேடும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.
பீஹார் மாநிலத்தில் உள்ள பாட்னாவில் பாஹர் எல்லைக்குள்பட்ட கங்கை ஆற்றில், 17 பேர் சென்றுக் கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவலின் பேரில், மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். 17 பேரில் 11 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 6 பேரை மீட்பு படையினர் தேடி வருகின்றனர்.
இது குறித்து மீட்பு படை அதிகாரி, ''இதுவரை 11 பேர் மீட்கப்பட்ட நிலையில், அவர்களில் சிலர் பாதுகாப்பாக நீந்தி ஆற்றின் கரையை அடைந்தனர். ஆறு பேரை இன்னும் காணவில்லை'' எனக் கூறினார்.