மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை ஹேக் செய்ய முடியுமா?: எலான் மஸ்க், முன்னாள் மத்திய அமைச்சர் இடையே விவாதம்

எலான் மஸ்க்
கேள்வி: '' மின்னனு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அகற்ற வேண்டும். மனிதர்கள் அல்லது ஏ.ஐ., மூலம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படும் ஆபத்து சிறிதாக இருந்தாலும் மிக அதிகமாக உள்ளது'' என எக்ஸ் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் கூறியிருந்தார்.
பதில்
இதற்கு பதில் அளித்து முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சேகர் வெளியிட்டுள்ள பதிவு: பாதுகாப்பான டிஜிட்டல் வன்பொருளை யாராலும் உருவாக்க முடியாது என எலான் மஸ்க் கூறுகிறார். இந்தியாவில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய இயலாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் பதிலடி
இந்தியாவில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய இயலாது என முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் கூறியதற்கு, ''எதையும் ஹேக் செய்யலாம்'' என எலான் மஸ்க் பதில் அளித்தார்.
பதில்
இதற்கு பதில் அளித்து, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜிவ் சேகர் வெளியிட்டுள்ள பதிவு: மின்னணு சாதனங்களை ஹேக் செய்ய முடியும் என்றாலும் இந்திய மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை. இதனை புளூடூத், வைபை மூலம் இணைக்க முடியாது. இவ்வாறு ராஜிவ் சேகர் பதில் அளித்துள்ளார்.