அத்வானியிடம் ஆசி பெற்றேன் முதல்வர் ரேகா குப்தா பெருமிதம்
அத்வானியிடம் ஆசி பெற்றேன் முதல்வர் ரேகா குப்தா பெருமிதம்
அத்வானியிடம் ஆசி பெற்றேன் முதல்வர் ரேகா குப்தா பெருமிதம்
ADDED : மார் 12, 2025 08:13 PM
புதுடில்லி:பா.ஜ., மூத்த தலைவரும், முன்னாள் துணைப் பிரதமருமான எல்.கே.அத்வானியை, பிருத்விராஜ் சாலையில் அவரது இல்லத்தில், முதல்வர் ரேகா குப்தா சந்தித்து ஆசி பெற்றார்.
சந்திப்புக்குப் பின், ரேகா குப்தா கூறியதாவது:
மூத்த தலைவர், பாரத ரத்னா அத்வானியிடம் ஆசியும் அவரது வழிகாட்டுதலையும் பெற்றேன். தேச சேவை, தியாகம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு தனித்துவமாக திகழ்பவர் அத்வானி. அவரது வாழ்க்கை நமக்கு மிகுந்த உத்வேகத்தை அளிக்கிறது. அவரது தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகள் மற்றும் நம் நாட்டை கட்டியெழுப்ப ஊக்கம் அளிக்கின்றன.
அத்வானி ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என இந்த ஹோலி நாளில் வேண்டிக் கொண்டேன்.
கடந்த 1990ம் ஆண்டு சோம்நாத் முதல் அயோத்தி வரை ரத யாத்திரை வாயிலாக நாடு முழுதும் அறியப்பட்ட அத்வானி, 1980ல் பாரதிய ஜனதா கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர். கட்சியின் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்தவர். பா.ஜ.,வின் சித்தாந்தம் மற்றும் தேர்தல் வியூகங்களை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு அத்வனிக்கு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.