Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/கர்நாடகாவில் அமைச்சர் மருமகனுக்காக புதிய பணியிடம் உருவாக்குவதா? : எதிர்கட்சிகள் கண்டனம்

கர்நாடகாவில் அமைச்சர் மருமகனுக்காக புதிய பணியிடம் உருவாக்குவதா? : எதிர்கட்சிகள் கண்டனம்

கர்நாடகாவில் அமைச்சர் மருமகனுக்காக புதிய பணியிடம் உருவாக்குவதா? : எதிர்கட்சிகள் கண்டனம்

கர்நாடகாவில் அமைச்சர் மருமகனுக்காக புதிய பணியிடம் உருவாக்குவதா? : எதிர்கட்சிகள் கண்டனம்

UPDATED : ஜூலை 22, 2024 07:03 PMADDED : ஜூலை 22, 2024 06:44 PM


Google News
Latest Tamil News
பெங்களூரு: கர்நாடகாவில் அமைச்சரின் மருமகனுக்காக சட்டசபை செயலர்-2 என்ற புதிய பணியிடத்தை உருவாக்குவதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

கர்நாடகா காங்கிரஸ் முதல்வராக சித்தராமையா உள்ளார். இவரது அமைச்சரவையில் சிறு, குறு தொழில்துறை அமைச்சராக (தனிப்பொறுப்பு ) கே.எச். முனியப்பா உள்ளார். இவரது மருமகன் சசிதரன் என்பவருக்கு சட்டசபை செயலாளர் பதவி வழங்குவதற்காக சட்டசபை செயலர்-2 என்ற புதிய பணியிடத்தை உருவாக்கி அதில் அவரை பணி நியமனம் செய்து வைக்க சித்தராமையா அரசு நடவடிக்கை எடுத்து இது தொடர்பாக நிதி அமைச்சகத்திற்கு ஒப்புதலுக்கு பரிந்துரைத்துள்ளதாக கூறப்படுகிறது.

சித்தராமையா அரசின் இந்த செயலுக்கு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. ஏற்கனவே செயலர் பதவி இருக்கும் போது அமைச்சரின் மருமகன் என்பதால் கூடுதலாக செயலர்-2 என்ற புதிய பணியிடத்தை உருவாக்குவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என விமர்சித்துள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us