Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/'சிறப்புத்திறனாளி இடஒதுக்கீடு சிவில் சர்வீசஸ் பணிக்கு தேவையா?'

'சிறப்புத்திறனாளி இடஒதுக்கீடு சிவில் சர்வீசஸ் பணிக்கு தேவையா?'

'சிறப்புத்திறனாளி இடஒதுக்கீடு சிவில் சர்வீசஸ் பணிக்கு தேவையா?'

'சிறப்புத்திறனாளி இடஒதுக்கீடு சிவில் சர்வீசஸ் பணிக்கு தேவையா?'

UPDATED : ஜூலை 22, 2024 08:59 PMADDED : ஜூலை 22, 2024 07:09 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளில், உடல்நலக் குறைபாடுகள் உள்ள சிறப்புத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு அவசியமா? என, மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்மிதா சபர்வால் கேள்வி எழுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மஹாராஷ்டிராவின் புனேவில் உதவி கலெக்டராக பணியாற்றி வந்த பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கர், உடல்நலக்குறைபாடு மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை முறைகேடாக பெற்றதாக புகார் எழுந்துள்ளது.

...

இதையடுத்து அவரது இரண்டு ஆண்டு பயிற்சி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் ஐ.ஏ.எஸ்., பதவிக்கு தேர்வானது குறித்து விசாரிக்க மத்திய அரசு குழு அமைத்துள்ளது.

இது குறித்து தெலுங்கானா நிதி கமிஷனில் உறுப்பு செயலராக உள்ள மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஸ்மிதா சபர்வால் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு:

மாற்றுத்திறனாளிகளுக்கான உரிய மரியாதையுடன் ஒரு விஷயத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

மாற்றுத்திறனாளியாக உள்ள ஒருவரை பைலட்டாக விமான நிறுவனம் நியமிக்குமா, அல்லது அறுவை சிகிச்சை நிபுணராக இந்த சமூகம் ஏற்றுக் கொள்ளுமா?

ஐ.ஏ.எஸ்., - - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட சிவில் சர்வீசஸ் பணிகளில் களப்பணிகள் பெரும் பங்கு வகிக்கும். நேரம் காலம் பார்க்காமல் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டும்.மக்களை சந்தித்து அவர்களின் பிரச்னைகளை காது கொடுத்து கேட்டு நிவர்த்தி செய்ய வேண்டும். இது போன்ற பணிகளுக்கு உடல்தகுதி மிகவும் முக்கியம். நம் உடல்நிலை அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதிக தெம்பு தேவைப்படும்.

எனவே, இதுபோன்ற பணிகளில் உடல்நலக் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்புத் திறனாளிகள் என்ற அடிப்படையில் இடஒதுக்கீடு அவசியமா என்பதை யோசிக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

...





      Our Apps Available On




      Dinamalar

      Follow us