ADDED : ஜூலை 26, 2024 03:01 AM
புதுடில்லி:டில்லி பல்கலையில்கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், முதலாம் ஆண்டு மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
டில்லி பல்கலையில் இளங்கலை, முதுகலை மற்றும் பிஎச்.டி., சேர்க்கை கோரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு 2024 - 2025 கல்வியாண்டுக்கு கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
முதலாம் ஆண்டு பி.டெக்., மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் 2.16 லட்சம் ரூபாயில் இருந்து 2.24 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
மாணவர்கள் நல நிதி, மேம்பாட்டுக் கட்டணம், வசதிகள் மற்றும் சேவைக் கட்டணங்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோர் ஆதரவு நிதி உள்ளிட்ட காரணங்களை கருத்தில் கொண்டு கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக டில்லி பல்கலை தெரிவித்துள்ளது.
டில்லி பல்கலை மாணவர் சங்கத்தின் பங்களிப்பு நிதி, எல்.எல்.பி., ஆகியவை கட்டணக் கட்டமைப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான பங்களிப்பு, 20 ரூபாயில் இருந்து, 40 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கல்வியாளர்களுக்கான ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்ட திட்டங்களுக்கான கட்டணம் 1.90 லட்சம் ரூபாயில் இருந்து 1.99 லட்சம்ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வி திட்ட கட்டணம், 57,400 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பிஎச்.டி.,படிப்புகளின் கட்டணமும் 7,130 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக செலுத்த வேண்டும்.
பல்கலைக்கழகத்தின் பல்வேறு திட்டங்களில் சேர்க்கை கோரும் வெளிநாட்டு மாணவர்களுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.