அழிவை நோக்கி செல்லும் ஜார்க்கண்ட்: மத்திய அமைச்சர் சவுகான் சாடல்
அழிவை நோக்கி செல்லும் ஜார்க்கண்ட்: மத்திய அமைச்சர் சவுகான் சாடல்
அழிவை நோக்கி செல்லும் ஜார்க்கண்ட்: மத்திய அமைச்சர் சவுகான் சாடல்
ADDED : ஜூலை 20, 2024 04:06 PM

ராஞ்சி: 'முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியில், மாநிலம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது' என மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் கடுமையாக சாடியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள பிர்சா முண்டாவின் சிலைக்கு சிவராஜ் சிங் சவுகான் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் அவர் பேசியதாவது: வாஜ்பாயினால் உருவாக்கப்பட்டு, பிரதமர் மோடியால் வளர்க்கப்பட்ட ஜார்க்கண்ட் மாநிலத்தை நாம் அனைவரும் பார்த்திருக்கிறோம். தற்போது ஹேமந்த் சோரன் ஆட்சியில், மாநிலம் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
சுரங்க மாபியா
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி (ஜே.எம்.எம்) என்றால் நில மாபியா, கொலை மாபியா மற்றும் சுரங்க மாபியா என்பது தான் அர்த்தம். நீங்கள் சொல்லுங்கள். இங்கு மணல் கிடைக்குமா?. ஏழை மக்கள் வீடு கட்டுவது சிரமமாகிவிட்டது. ஜார்க்கண்ட்டிற்கு தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்காக, மத்திய அரசு 10,625 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. ரயில்வேக்கு 27 ஆயிரத்து 459 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.