மாநகராட்சி குப்பை லாரி மோதி இரு ஐ.டி., ஊழியர்கள் பலி
மாநகராட்சி குப்பை லாரி மோதி இரு ஐ.டி., ஊழியர்கள் பலி
மாநகராட்சி குப்பை லாரி மோதி இரு ஐ.டி., ஊழியர்கள் பலி
ADDED : ஜூலை 30, 2024 07:37 AM

பெங்களூரு: பெங்களூரு மாநகராட்சியின் குப்பை அள்ளும் லாரி மோதியதில், பெண் உட்பட இரு தகவல் தொழில்நுட்ப ஊழியர்கள் பலியாகினர்.
பெங்களூரு, பானஸ்வாடியைச் சேர்ந்தவர் பிரசாந்த், 25, ஆந்திராவைச் சேர்ந்தவர் ஷில்பா, 27. இருவரும் டி.சி.எஸ்., நிறுவனத்தில் தகவல் தொழில்நுட்ப ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். நேற்று முன்தினம் விடுமுறை என்பதால் இருவரும் இரவு வெளியே சாப்பிட சென்றனர். மெஜஸ்டிக்கில் இருந்து கே.ஆர்., சதுக்கத்தில் இரு சக்கர வாகனத்தில் இருவரும் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது சி.ஐ.டி., சந்திப்பு வழியாக இணைப்பு சாலையில் வேகமாக வந்த பெங்களூரு மாநகராட்சியின் குப்பை அள்ளும் லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
கீழே விழுந்த இருவர் மீதும் லாரி ஏறியது. படுகாயமடைந்த இருவரையும், அங்கிருந்தோர் மீட்டு, செயின்ட் மார்தாஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.
விபத்து நடந்தவுடன், லாரி ஓட்டுனர் தப்பிவிட்டார். ஹலசூரு கேட் போலீசார் விசாரிக்கின்றனர். தப்பியோடிய ஓட்டுனரை கைது செய்ய வேண்டும் என இறந்தவர்களின் பெற்றோர் கதறினர்.