Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்

தங்கவயல் செக்போஸ்ட்

ADDED : ஜூலை 30, 2024 07:36 AM


Google News
*ஒருமாதம் தேவையா?

பெமல் பேக்டரியில் டி.சி.எல்., எம்ப்ளாயிஸ் திடீர் போராட்டம், சப்புன்னு போய் விட்டதாக பேசுறாங்க. அப்பாய்ன்மென்ட் வாங்கி தர உரிய உத்தரவாதமே இல்லையாம்.

நாட்டின் தலைநகர் டில்லியில் இருந்த எம்.பி., தகவல் கிடைத்த, 6 மணி நேரத்தில் போராட்ட இடத்திற்கே வந்து சேர்ந்தார். ஆனால் 100 கி.மீ., தொலைவில், மாநில தலைநகரில் உள்ள தலைமை டைரக்டருடன் பேச, ஒரு மாத கால அவகாசம் தேவையாம்.

ஒரு எம்.பி., ரெண்டு எம்.எல்.ஏ., வந்தாங்க. டைரக்டர் வரும் வரை போராட்டம் தொடருமுன்னு சொல்லி அந்த ஆபிசரை வரவழைத்து தீர்வு காணாமல் போராட்டத்தை முறியடிச்சிட்டாங்களே. ஒரு மாத காலக்கெடுவுக்கு பிறகு என்ன தான் சாத்தியம் ஆகப்போகுதோ. எல்லாமே கண்துடைப்பாக இருக்குமான்னு சந்தேகம் எழுந்துள்ளது.

***

தகிட தத்தம் ஏஜென்ட்டுகள்

ஆர்.டி.ஓ., அலுவலகம் கோல்டு சிட்டியில் இருந்து, வேறு தொகுதிக்கு மாற இருந்ததை தடுத்து நிறுத்தி சாதிச்சாச்சு.

கோல்டு சிட்டி பெமல் நகரில் 10 ஏக்கரில் சகல வசதிகளோட ஆர்.டி.ஓ., அலுவலகம் 3.65 கோடி ரூபாயில் கட்டி முடிச்சாச்சு. இதன் திறப்பு விழாவுக்காக நல்ல நாளை தேடுறாங்களா; மாநில மந்திரிங்களோட வருகைக்காக காத்திருக்காங்களான்னு தெரியல.

ஆர்.டி.ஓ., ஆபிசை இயக்குகிற ஏஜென்ட்டுகள் பாடு தான், தகிட தத்தம் போடுது. சின்ன சின்ன ஸ்டால்கள், ஜெராக்ஸ் கடைகள், தள்ளுவண்டி உணவகம் இடம் தேடுறாங்க. திடீர் கடைகளுக்கும், உணவகங்களுக்கும் இப்பவே வலை வீசுறாங்க. இதற்காக தொகுதியின் மேடம் கருணைக்காக பலர் சுழலுறாங்க.

***

எப்போ கிடைக்கும்?

அசெம்பிளியில் கோல்டன் சிட்டி மக்கள் தலைவி, ஹாஸ்டல் விஷயம் பற்றி விளாசினார். அது தேவை தான். யாரும் மறுக்கல. எதிர்க்கட்சிக்காரங்க வரவேற்றாங்க.

அதே போல மருத்துவமனையில் பெருசா கட்டடம் இருக்குது. லிப்ட் வசதியுடன் மேல் மாடி, ஐ.சி.யு., ஸ்கேனிங் மிஷின், தேவைக்கான ஆக்சிஜனும் இருக்குது. ஆனா, இதனை இயக்க டாக்டர் இல்லையே.

மாரடைப்பு ஏற்பட்டால் எமன் வாகனம் ஏற வேண்டிய நிலையே நீடிக்குது. கடந்த ஒரே வாரத்தில் இரண்டு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாம உயிர் போனது. இது பற்றியும் பேசவேண்டும். இதய பிரிவுக்கு மருத்துவம் தேவைன்னு பேசி சக்சஸ் ஆக்க வேணும்னு கோல்டு சிட்டியே எதிர்ப்பாக்குது.

***

*கேப்டன் இல்லாத பூக்காரங்க!

காணாமல் போயிருந்த புல்லுக்கட்டுக்கு கோலார் செங்கோட்டைக்காரரால் அடையாளம் காட்ட 'அட்ரஸ்' கிடைத்து விட்டது. அரசியலில் துளிர் விட ஆரம்பமாகிட்டாங்க. இதனால் அடுத்து வரும் தேர்தல்களில் புல்லுக் கட்டும் கோதாவில் குதிக்க பயிற்சியில் இறங்கிட்டாங்க.

ஜில்லா பஞ்சாயத்து தேர்தலில் பூக்காரருக்கு விட்டுக் கொடுத்து, அசெம்பிளி 'சீட்' டை புல்லுக்கட்டுக்காரங்க கேட்க தயாராகி வராங்க.

செங்கோட்டைக்காரரின் செயல்பாடுகளால் தான் கோல்டு மைன்ஸ், பெமல் பேக்டரி பிரச்னை தீர்க்க முடியுமாம். மைன்ஸ் வீடுகளை குடியிருக்கும் 'பிபிஎல்' காரர்களுக்கு சொந்தம் ஆக்க சாத்தியம் உள்ளதை பரிசீலித்து வராரு. இதன் சாதனையாளராக மின்ன போறாரு.

இவரும் அரசிலை நெனச்சு வியூகம் அமைத்து வேலையை தொடங்கிட்டாராம்.

கேப்டன் இல்லாத ராணுவமாக, பூக்காரங்க சோர்வில் இருக்காங்க.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us