Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ மாயமான முன்னாள் அமைச்சர் கால்வாயில் பிணமாக மீட்பு

மாயமான முன்னாள் அமைச்சர் கால்வாயில் பிணமாக மீட்பு

மாயமான முன்னாள் அமைச்சர் கால்வாயில் பிணமாக மீட்பு

மாயமான முன்னாள் அமைச்சர் கால்வாயில் பிணமாக மீட்பு

UPDATED : ஜூலை 18, 2024 03:12 AMADDED : ஜூலை 18, 2024 12:27 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

கேங்டாக்: சிக்கிமில் காணாமல் போன முன்னாள் அமைச்சர் பவுடியால், 80, உடல், மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள கால்வாயில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் முதல்வர் பிரேம் சிங் தமாங் தலைமையிலான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சி நடக்கிறது.

இங்கு, ரைசிங் சன் என்ற கட்சியின் நிறுவனரான பவுடியால், 80, சிக்கிம் சட்டசபையின் முதல் துணை சபாநாயகராகவும், வனத்துறை அமைச்சராகவும் இருந்தார். 1970 - 80 காலகட்டங்களில் அந்த மாநிலத்தின் முக்கிய அரசியல்வாதியாக இருந்தார்.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி பாங்யோங் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான சோட்டாசிங்டாமில் இருந்து காணாமல் போனார்.

இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் ஜல்பைகுரி மாவட்டத்தின் புல்பாரியில் உள்ள டீஸ்டா கால்வாயில் மிதந்து கொண்டிருந்த உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.

உடை மற்றும் கைக்கடிகாரத்தை வைத்து, அந்த உடல் பவுடியால் உடையது என அடையாளம் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கைக்குப் பின் விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிக்கிம் மாநிலத்தின் கலாசாரம் மற்றும் அதன் சமூக இயக்கம் பற்றிய ஆழ்ந்த புரிதல் உடைய பவுடியாவின் மறைவுக்கு, அம்மாநில முதல்வர் பிரேம் சிங் தமாங் இரங்கல் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us