ADDED : ஜூலை 09, 2024 04:58 AM
ஹொஸ்கோட் : பெங்களூரு ரூரல் ஹொஸ்கோட் அருகே பைலனநரசபுரா கிராமத்தை சேர்ந்தவர் அபக் அமீர்கான், 45. பைலனநரசபுரா கிராம பஞ்சாயத்தில், காங்கிரஸ் கவுன்சிலராக இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் அருகே நின்று மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், அபக் அமீர் கானை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். பலத்த வெட்டு காயம் அடைந்த அபக் அமீர்கான் பரிதாபமாக இறந்தார். நந்தகுடி போலீசார் விசாரிக்கின்றனர்.
கிராம பஞ்சாயத்து கவுன்சிலர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.