வீடு இடிந்து மூவர் பலி
ஹாவேரி மாவட்டத்தில், பரவலாக மழை பெய்கிறது. சவனுாரின், மாதாபுரா கிராமத்திலும் மூன்று நாட்களாக தொடர் மழையால் மக்கள் அவதிப்படுகின்றனர். நேற்று காலை ஹரமனி என்பவரின் வீடு இடிந்து விழுந்தது.
இதில் இவரது மனைவி சென்னம்மா, 30, இரட்டை குழந்தைகள் அமுல்யா, 2, அனன்யா, 2, உயிரிழந்தனர். இவரது தாயார் எல்லம்மா, 70, உட்பட மூவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
தகவல் அறிந்து, ஹாவேரி பா.ஜ., - எம்.பி., பசவராஜ் பொம்மை அதிர்ச்சி அடைந்துள்ளார். 'இவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதி வழங்க வேண்டும். காயமடைந்தவர்களின் மருத்துவ சிகிச்சைக்கான செலவை, அரசு ஏற்க வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார்.
சம்பவ இடத்தை கலெக்டர் மஹாந்தேஷ் தாமன்னனவர் உட்பட, உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.