டில்லி அமைச்சர் போராட்டத்தில் கூச்சல், குழப்பம்: கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷம்
டில்லி அமைச்சர் போராட்டத்தில் கூச்சல், குழப்பம்: கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷம்
டில்லி அமைச்சர் போராட்டத்தில் கூச்சல், குழப்பம்: கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷம்
UPDATED : ஜூன் 22, 2024 04:38 PM
ADDED : ஜூன் 22, 2024 03:55 PM

புதுடில்லி: ஹரியானாவில் இருந்து தண்ணீர் திறக்க வலியுறுத்தி, டில்லி அமைச்சர் ஆதிஷி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனார். 2வது நாளான இன்று(ஜூன் 22) போராட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது. முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷம் எழுப்பியதால், பரபரப்பு ஏற்பட்டது.
டில்லியில், வெயில் ஒரு பக்கம் வாட்டி வதைக்க, குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல்வேறு பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் காலி குடங்களுடன் காத்திருக்கின்றனர். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். இரு நாட்களில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவேன் என ஆம் ஆத்மியைச் சேர்ந்த டில்லி நீர்வளத் துறை அமைச்சர் ஆதிஷி கூறியிருந்தார்.
இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி டில்லியின் போகல் என்ற இடத்தில், நீர்வளத் துறை அமைச்சர் ஆதிஷி நேற்று காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவங்கினார். 2வது நாளான இன்று(ஜூன் 22) போராட்டத்தில் கூச்சல், குழப்பம் நிலவியது. முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷமிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. அப்போது, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா, ஆம் ஆத்மி எம்.பி., - சஞ்சய் சிங், அமைச்சர் சவுரப் பரத்வாஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதிஷி விளக்கம்
'இன்று உண்ணாவிரத போராட்டத்தில் சிலர் வந்து தொந்தரவு செய்தனர். பாஜ.,வினருக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நாங்கள் மஹாத்மா காந்தி கற்பித்த வழியில் செல்கிறோம். இதுபோன்ற செயல்களால் நாங்கள் உண்ணாவிரத போராட்டத்தை நிறுத்த மாட்டோம்' என டில்லி அமைச்சர் அதிஷி விளக்கம் அளித்துள்ளார்.