போலீசை காரில் இழுத்துச் சென்ற போதை டிரைவர்: ஹரியானாவில் துணிகரம்
போலீசை காரில் இழுத்துச் சென்ற போதை டிரைவர்: ஹரியானாவில் துணிகரம்
போலீசை காரில் இழுத்துச் சென்ற போதை டிரைவர்: ஹரியானாவில் துணிகரம்
ADDED : ஜூன் 22, 2024 03:08 PM

பரிதாபாத்: கார் ஆவணங்களை சோதனை செய்ய வந்த போலீஸ்காரரை, போதையில் இருந்த டிரைவர் ஒருவர் காரில் இழுத்துச் சென்ற துணிகர சம்பவம் ஹரியானாவில் நடந்துள்ளது.
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தின் பல்லப்கார்க் பகுதியில் போதையில் இருந்த கார் டிரைவர் ஒருவர், நடுரோட்டில் வாகனத்தை நிறுத்தியுள்ளார். இதனையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அங்கு பணியில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவர், டிரைவரிடம் விசாரணை நடத்தினார். அபராதம் வசூலிக்க ஆவணங்களை காட்டுமாறு கூறியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
தொடர்ந்து, காருக்குள் சென்று ஆவணங்களை சோதனை செய்ய, அந்த போலீஸ்காரர் காரை பிடித்தபடி உள்ளே எட்டிபார்த்தார். அப்போது கார் டிரைவர் திடீரென கார் ஆக்ஸிலேட்டரை மிதித்தார். கார் கிளம்பியதால், அந்த போலீஸ்காரர் வேகமாக இழுத்துச் செல்லப்பட்டார். உடனடியாக அங்கிருந்தவர்கள் மற்றும் மற்ற போலீஸ் அதிகாரிகள் அவரை மீட்டனர். அந்த கார் டிரைவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது.