மாணவி மூளை செயலிழப்பு உடல் உறுப்புகள் தானம்
மாணவி மூளை செயலிழப்பு உடல் உறுப்புகள் தானம்
மாணவி மூளை செயலிழப்பு உடல் உறுப்புகள் தானம்
ADDED : ஜூலை 30, 2024 07:33 AM

துமகூரு: விபத்தில் சிக்கி மூளை செயலிழந்த மாணவியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.
துமகூரு, திப்டூர் ஹளேபாளையா கிராமத்தில் வசித்தவர் சந்தனா, 12. இவர் விவேகானந்தா இன்டர்நேஷனல் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். ஜூலை 23ல் வழக்கம் போன்று பள்ளிக்குச் சென்ற மாணவி, மாலையில் வகுப்பு முடிந்து வீட்டுக்கு நடந்து சென்றார்.
சாலையை கடக்க முயன்றபோது, லாரி மோதி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஹாசன் மருத்துவ கல்லுாரியில் சேர்க்கப்பட்டார். நேற்று முன் தினம் அவரின் மூளை செயலிழந்தது. மகளின் உடல் உறுப்புகளை, பெற்றோர் தானம் செய்தனர்.
சந்தனாவின் உடல் உறுப்புகள், மைசூரு மற்றும் பெங்களூரின் ஆறு சிறார்களுக்கு பொருத்தப்பட்டன.