சிறுமி உடலுக்கு உரிமை கோரிய இருவர்; அடையாளம் காட்டியது நெயில் பாலிஷ்: கல் நெஞ்சையும் உருக்கும் இன்னொரு சம்பவம்!

அடையாளம்
உடலில் இருந்த காயத்தின் தழும்புகள் மற்றும் மச்சம் ஏதோ ஒன்றை மட்டுமே வைத்து அது தமது உறவுதான் என கண்ணீர் விட்டபடி, அடையாளம் காண்பித்து செல்கின்றனர். அந்த வகையில், மலப்புரத்தில் உள்ள சாலியாற்றில் இருந்து மீட்கப்பட்ட உடலுக்கு பிரெஸ்நெவ் என்ற நபர் அடையாளம் காண வந்திருந்தார். நிலச்சரிவு ஏற்பட்ட போது, தனது மகள் அனாமிகா நீலநிற நெயில் பாலிஷ் போட்டிருந்தார். இது தான் எனது மகளின் உடல் என கண்ணீர் மல்க அடையாளம் காண்பித்தார்.
நெயில் பாலிஷ்
மற்றொரு குடும்பத்தினர் இது தனது மகள் உடல் என உரிமை கோரினர். ''உங்களது மகள் நெயில் பாலிஷ் போட்டிருந்தாரா?'' என அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தனது மகளுக்கு நெயில் பாலிஷ் போடும் பழக்கம் கிடையாது என பதில் அளித்தனர். ''நிலச்சரிவில் மண்ணில் புதையுண்டதால் நகத்தின் நிறம் மாறி உள்ளது'' என குடும்பத்தினர் தெரிவித்ததால், அதிகாரிகள் திணறி போயினர்.
யார் உடல் இது!
மேப்பாடியில் வசித்து வருபவர் பிரெஸ்நெவ். இவரது மகள் அனாமிகா 9ம் வகுப்பு படித்து வந்தார். நிலச்சரிவு ஏற்பட்ட போது, அனாமிகா அவரது பாட்டியில் வீட்டில் தங்கியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக, அனாமிகா ஆற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்தார்.