3 பேரை கொன்ற காட்டு யானை கும்கிகள் உதவியுடன் பிடிப்பு
3 பேரை கொன்ற காட்டு யானை கும்கிகள் உதவியுடன் பிடிப்பு
3 பேரை கொன்ற காட்டு யானை கும்கிகள் உதவியுடன் பிடிப்பு
ADDED : ஜூலை 30, 2024 07:45 AM

பன்னரகட்டா: மூன்று பேரை கொன்ற காட்டு யானை மக்னாவை, 100 வனத்துறை ஊழியர்கள் போராடி, கும்கி யானைகள் உதவியுடன் வெற்றிகரமாக நேற்று பிடித்தனர்.
பெங்களூரு பன்னரகட்டா தேசிய பூங்காவை ஒட்டி உள்ள கிராமங்களில், மக்னா என்ற காட்டு யானை, சில நாட்களில் மூன்று பேரை கொன்றது.
இதை பிடிப்பதற்காக, துபாரே, மத்திகோடு முகாமில் இருந்து, எட்டு கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன. கும்கி யானைகள் மீது துப்பாக்கிகளுடன் வனத்துறை ஊழியர்கள் காட்டுக்குள் நேற்று தேடினர்.
ட்ரோன் மூலம் எங்குள்ளது என்று கண்டுபிடித்து, அங்கு கும்கி யானைகளுடன் வனத்துறையினர் சென்றனர். மயக்க மருந்து நிபுணர் ரஞ்சன், அடாவடி செய்து வந்த மக்னா யானை மீது துப்பாக்கி மூலம் மயக்க மருந்து செலுத்தினார்.
பின், 1 கி.மீ., துாரம் நடந்து சென்ற யானைக்கு மயக்கம் ஏற்பட்டது. தடிமனான கயிறுகளுடன் கட்டி, பீமா, மகேந்திரா கும்கி யானைகள் உதவியுடன் சிறிது துாரம் மக்னா அழைத்து வரப்பட்டது.
லாரியில் ஏற்றி பன்னரகட்டா தேசிய பூங்காவின் சீகேகட்டே யானைகள் முகாமுக்கு காட்டு யானை கொண்டு செல்லப்பட்டது. இந்த பணியில் 100க்கும் அதிகமான ஊழியர்கள் ஈடுபட்டனர்.