விபத்து செவ்வாய்: நிலச்சரிவில் புதைந்த பரிதாபம், ரயில் விபத்தில் சிக்கிய பலர், கிணறு வெட்ட போன உயிர்

ADDED : ஜூலை 30, 2024 08:49 AM

இன்று (ஜூலை-30) செவ்வாய்க்கிழமை விடியும் போது பல துயரச்சம்பவங்களை இயற்கை உதிர்த்து விட்டு சென்றிருக்கிறது. விபத்து செவ்வாயில் பலர் உயிரிழந்துள்ளனர். பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கேரள மாநிலம் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. வயநாடு பகுதிக்குட்பட்ட மேப்பாடி. சூரல்மலை, குண்டகையில் நிலச்சரிவு ஏற்பட்டது. 20 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் உயிர்ப்பலி இருக்கும் என அஞ்சப்படுகிறது. இங்குள்ள ஒரு பாலம் இடிந்ததால் பலர் வெளியே வர முடியாமல் தவிக்கின்றனர். விமான படை விரைந்துள்ளது.
கோவை, நீலகிரி, மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வால்பாறையில் சோலையாறு அணை இடதுகரை என்ற பகுதியில் மண் சரிந்து ராஜேஸ்வரி, பிரியா உயிரிழந்தனர்.
ஜார்கண்ட் மாநிலத்தில் ஹவுரா- ஜிஎஸ்எம்டி ரயில் தடம் புரண்டதில் 6 பேர் காயமுற்றனர். தமிழகத்தில் விழுப்புரம் திருவெண்ணைநல்லூர் கிராமத்தில் கிணறு தோண்டும் போது 3 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு விடிந்த விபத்து செவ்வாயில் கேரளாவில் இன்னும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.