இறந்த அதிகாரிக்கு இடமாற்ற உத்தரவு
இறந்த அதிகாரிக்கு இடமாற்ற உத்தரவு
இறந்த அதிகாரிக்கு இடமாற்ற உத்தரவு
ADDED : ஜூலை 14, 2024 05:48 AM
கலபுரகி: கர்நாடகாவில் ஆறு மாதங்களுக்கு முன் இறந்துபோன பொறியாளருக்கு இடமாற்ற உத்தரவு பிறப்பித்து, நகர்ப்புற வளர்ச்சித் துறை குளறுபடி செய்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு கலபுரகி மாவட்டம், சித்தாபுராவின் திக்காகுவா கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் பீமராய் புட்டபாக், 54.
இவர், சேடம் நகராட்சியில் ஜூனியர் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 12ல் காலமானார். மறுநாள் நடந்த இறுதிச் சடங்கில், நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், இவரை சேடம் டவுன்சபையில் இருந்து, குடகு மாவட்டம், மடிகேரி நகராட்சியின் ஜூனியர் பொறியாளர் பதவிக்கு இடமாற்றம் செய்து, நகர வளர்ச்சித் துறை ஜூலை 9ல் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இறந்து ஆறு மாதங்கள் ஆன அதிகாரியை இடமாற்றம் செய்து, நகர்ப்புற வளர்ச்சித்துறை பிறப்பித்த உத்தரவு, நகைப்புக்கு காரணமாகி உள்ளது.
தங்களின் துறையைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் இறந்தது நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு தெரியாதா என பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர்.