127 வயதில் யோகா செய்து அசத்திய யோகா குரு: வீடியோ வைரல்
127 வயதில் யோகா செய்து அசத்திய யோகா குரு: வீடியோ வைரல்
127 வயதில் யோகா செய்து அசத்திய யோகா குரு: வீடியோ வைரல்
UPDATED : ஜூன் 16, 2024 12:36 PM
ADDED : ஜூன் 16, 2024 12:30 PM

மும்பை: சர்வதேச யோகா தினத்தையொட்டி, மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் 127 வயதான யோகா குரு, யோகா செய்து அசத்தினார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.
வரும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. உலகளவில், பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஜூன் 19ம் தேதி யோகா நாளில் பல பொதுஇடங்களில் யோகா நிகழ்ச்சிகள் செய்யவும், விழிப்புணர்வு மேற்கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையை சேர்ந்த, 127 வயதான யோகா குரு பத்ம ஸ்ரீ சுவாமி சிவானந்தா யோகா செய்து அசத்தினார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. 127 வயதான யோகா குரு, கழுத்தை அசைத்து யோகா செய்யும் காட்சி வீடியோவில் இடம்பெற்றுள்ளது. வயதானாலும் சிறப்பாக யோகா செய்து காட்டி, பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.