‛ ஸ்வீட் பாக்ஸூக்கு காத்திருக்கிறேன் ': முதல்வருக்கு ராகுல் நகைச்சுவை பதில்
‛ ஸ்வீட் பாக்ஸூக்கு காத்திருக்கிறேன் ': முதல்வருக்கு ராகுல் நகைச்சுவை பதில்
‛ ஸ்வீட் பாக்ஸூக்கு காத்திருக்கிறேன் ': முதல்வருக்கு ராகுல் நகைச்சுவை பதில்
ADDED : ஜூன் 19, 2024 05:41 PM

புதுடில்லி: ஸ்வீட் பாக்ஸூக்கு காத்திருக்கிறேன் என பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு காங்., எம்.பி., ராகுல் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.
கோவை பிரச்சாரத்திற்கு வந்த போது ராகுல் ஸ்வீட் பாக்ஸ் வழங்கிய வீடியோவை பதிவிட்டு, முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து இருந்தார். இது குறித்து அவர் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‛‛ அன்புச் சகோதரர் ராகுலுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
நாட்டு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ராகுல் மிக உயர்ந்த இடத்துக்கு செல்வார். இந்த ஆண்டு முழுவதும் ராகுலுக்கு வளர்ச்சி மற்றும் வெற்றிகள் வந்து சேரட்டும்' என கூறப்பட்டு இருந்தது.
இந்நிலையில், என் அன்புச் சகோதரர் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. ஸ்வீட் பாக்ஸூக்கு காத்திருக்கிறேன் என பிறந்த நாள் வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலினுக்கு ராகுல் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார்.